Tecno Camon 30S Pro போன் அறிமுகம் விலை தகவல் தெருஞ்சிகொங்க.!

Tecno Camon 30S Pro போன் அறிமுகம் விலை தகவல் தெருஞ்சிகொங்க.!,Tecno Camon 30S Pro Specifications,டெக்னோ கேமன் 30எஸ் ப்ரோ அம்சங்கள்
Tecno Camon 30S Pro போன் அறிமுகம் விலை தகவல் தெருஞ்சிகொங்க.!

Tecno அடுத்ததாக Tecno Camon 30S Pro ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது, அதாவது இந்த போன் உலக சந்தையிலும் இந்திய சந்தையிலும் அறிமுகப்படுத்தப்படும். குறிப்பாக சோனி கேமரா, டால்பி அட்மோஸ், பாஸ்ட் சார்ஜிங் என பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும். ஆன்லைனில் வெளியிடப்பட்ட இந்த போனின் அம்சங்களையும் இங்கே பார்க்கலாம்.

Tecno Camon 30S Pro Specifications


டெக்னோ கேமன் 30எஸ் ப்ரோ அம்சங்கள்: டெக்னோ கேமன் 30எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் முழு எச்டி பிளஸ் அமோல்ட் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த போனின் டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் பிரைட்னஸ், 1300 நிட்ஸ் பிரைட்னஸ், 2160 ஹெர்ட்ஸ் பிடபிள்யூஎம் டிம்மிங் (2,160 ஹெர்ட்ஸ் பிடபிள்யூஎம் டிம்மிங்) உள்ளிட்ட பல்வேறு டிஸ்ப்ளே அம்சங்களை கொண்டுள்ளது.

டெக்னோ கேமன் 30எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி100 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், இந்த போன் HIOS அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்துடன் வருகிறது. இருப்பினும், இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகள் உள்ளன.
Tecno Camon 30S Pro போன் அறிமுகம் விலை தகவல் தெருஞ்சிகொங்க.!


ஸ்மார்ட்போனில் 16ஜிபி ரேம் (8ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 256ஜிபி சேமிப்பு உள்ளது. கூடுதலாக, இந்த அற்புதமான ஸ்மார்ட்போன் நினைவக விரிவாக்கத்திற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. அதாவது நீங்கள் SD card பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. இந்த போன் ஷிம் சில்வர் கிரீன், இன்டர்ஸ்டெல்லர் கிரே மற்றும் பேர்ல் கோல்டு ஆகிய நிறங்களில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போனில்  SONY IMX896 50MP கேமரா சென்சார் + 2MP டெப்த் சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. என இந்த போனின் உதவியுடன் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இது தவிர, எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது.

இந்த Tecno Camon 30S Pro ஸ்மார்ட்போனில் Dolby Atmos ஆதரவுடன் டூயல் ஸ்பீக்கர்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும், இந்த அற்புதமான ஸ்மார்ட்போனில் IP53 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஸ் ரெசிஸ்டண்ட் (டஸ்ட்/ஸ்பிளாஸ் ரெசிஸ்டண்ட்) உள்ளது.
Tecno Camon 30S Pro போன் அறிமுகம் விலை தகவல் தெருஞ்சிகொங்க.!

டெக்னோ கேமன் 30எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. 20W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. மற்றும் பேட்டரியை சார்ஜ் செய்ய (45W ஃபாஸ்ட் சார்ஜிங்) வசதி குறிப்பாக இந்த போனை வாங்கும் பயனர்கள் சார்ஜ் செய்வதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதாவது இந்த போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும்.

இந்த Tecno Camon 30S Pro ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. தொலைபேசியில் 5G, 4G VoltE, Wi-Fi, GPS, USB Type-C போர்ட் உள்ளிட்ட இணைப்பு ஆதரவும் உள்ளது. மேலும் இந்த போன் ரூ.20,000க்குள் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக