ஆகஸ்ட் 29-ம் தேதி Motorola Edge 50 Neo போன்.. அறிமுகம், என்ன விலை?

ஆகஸ்ட் 29-ம் தேதி Motorola Edge 50 Neo போன்.. அறிமுகம், என்ன விலை?,

ஆகஸ்ட் 29-ம் தேதி Motorola Edge 50 Neo போன்.. அறிமுகம், என்ன விலை?

மோட்டோரோலா தனது புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 29-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பாக, இந்த போன் அறிமுகம் குறித்த தகவல் எக்ஸ் (ட்விட்டர்) இல் வெளியானது. இந்த போனில் OLED டிஸ்ப்ளே, சோனி கேமரா உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. ஆன்லைனில் கசிந்துள்ள இந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ விவரக்குறிப்புகள்: ஃபோனில் 6.36-இன்ச் முழு HD பிளஸ் OLED (OLED) டிஸ்ப்ளே உள்ளது. இந்த போனில் 2400×1080 பிக்சல்கள், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதம், 1300 நிட்ஸ் பிரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்லிங் ரேட் மற்றும் பல்வேறு டிஸ்ப்ளே அம்சங்கள் உள்ளன.


மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஆனது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உடன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட்டைக் கொண்டுள்ளது. Mali-G610 MC3 GPU (மாலி-ஜி610 எம்சி3 ஜிபியு) கிராபிக்ஸ் கார்டும் இந்த போனில் உள்ளது. எனவே கேமிங் யூசர்கள் இந்த போனை நம்பிக்கையுடன் வாங்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ 12 ஜிபி ரேம் + 512 ஜிபி சேமிப்பு மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி சேமிப்பு என 2 வகைகளில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த போன் IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் உடன் அறிமுகமாகும். இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருளில் நிறுவனம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஃபோனில் 50 எம்பி சோனி எல்ஒய்டி-700சி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 10 எம்பி டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 3 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் துல்லியமாக படங்களை எடுக்க முடியும்.

ஆகஸ்ட் 29-ம் தேதி Motorola Edge 50 Neo போன்.. அறிமுகம், என்ன விலை?

செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 32எம்பி கேமரா உள்ளது. மேலும், மோட்டோரோலா எட்ஜ்50 போனில் டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. எனவே நீங்கள் சிறந்த ஆடியோ அனுபவத்தைப் பெறுவீர்கள்.

அதேபோல், மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போனில் 68W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும். எனவே இந்த போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும். மேலும் இதன் இணைப்பு அம்சங்களின் அடிப்படையில் Wi-Fi 6E (Wi-Fi 6E), Bluetooth 5.2 (Bluetooth 5.2), GPS (GPS), NFC (NFC) ஆகியவை வழங்கப்படும்.

குறிப்பாக Pantone Nautical Blue (Pantone Nautical Blue), Pantone Latte (Pantone Latte), Pantone Poinciana (Pantone Poinciana), Pantone Grisaille போன்றவை. மேலும் Motorola Edge 50 Neo போன் ரூ.32,000 பட்ஜெட்டில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. 


Photo Credit: X, @evleaks, Motorola

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக