வாங்குனா இந்த Samsung போன் தான் வாங்கணும் இல்ல வாங்க கூடாது. என் தெரியுமா?

வாங்குனா இந்த Samsung போன் தான் வாங்கணும் இல்ல வாங்க கூடாது. என் தெரியுமா?Samsung Galaxy S24 FE specification,சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ அம்சங்கள்,

வாங்குனா இந்த Samsung போன் தான் வாங்கணும் இல்ல வாங்க கூடாது. என் தெரியுமா?

Samsung Galaxy S24 FE (சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ) ஸ்மார்ட்போன் அறிமுகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த புதிய போன் அக்டோபர் மாதம் உலக சந்தையிலும் இந்திய சந்தையிலும் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் இந்த போனின் அம்சங்களை ஆன்லைனில் கசிந்துள்ளதை இப்போது பார்க்கலாம்.

Samsung Galaxy S24 FE specification

சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ அம்சங்கள்: Samsung Galaxy S24 FE ஃபோன் 6.7 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. பின்னர் டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 1200 நிட்ஸ் பிரகாசம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Samsung Galaxy S24 FE ஃபோனில் 50MP வைட்-ஆங்கிள் லென்ஸ் + 12MP அல்ட்ரா-வைட் சென்சார் + 8MP டெலிஃபோட்டோ லென்ஸின் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. பின்னர் 3X ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் போன் வருவதால், இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.


செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 10எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இது தவிர, தொலைபேசியில் எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன. தொலைபேசியில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது.

Samsung Galaxy S24 FE ஸ்மார்ட்போன் One UI 6.1.1 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 14 (Android 14) உடன் அறிமுகப்படுத்தப்படும். இருப்பினும், இந்த போன் ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த போனின் மென்பொருளில் சாம்சங் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

வாங்குனா இந்த Samsung போன் தான் வாங்கணும் இல்ல வாங்க கூடாது. என் தெரியுமா?

அதன்படி, இந்த Samsung Galaxy S24 FE ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த Exynos 2400e சிப்செட் உடன் வெளியிடப்படும். பின்னர் போனில் Galaxy AI (AI) அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ள சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Samsung Galaxy S24 FE ஸ்மார்ட்போன் 4565mAh பேட்டரியுடன் வெளியிடப்படும். எனவே இந்த போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும். அப்போது இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய வேகமாக சார்ஜ் செய்யும் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட், டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்.


இந்த புதிய சாம்சங் போனில் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு உள்ளது. மேலும் Samsung Galaxy S24 FE போன் சற்று அதிக விலையில் வெளியிடப்படும். ஆனால் இந்த போன் விலைக்கு ஏற்ற அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக