ஆதாரை புதுப்பிக்கவும், திருத்தம் செய்யவும் டிசம்பர் 14 வரை கால அவகாசம்

ஆதாரை புதுப்பிக்கவும், திருத்தம் செய்யவும் டிசம்பர் 14 வரை கால அவகாசம்,இ-சேவை மையங்களில் கூட்டம்,Adhar Card update,update aadhar card online

ஆதாரை புதுப்பிக்கவும், திருத்தம் செய்யவும் டிசம்பர் 14 வரை கால அவகாசம்

ஆதாரை புதுப்பிக்கவும், திருத்தம் செய்யவும் டிசம்பர் 14 வரை கால அவகாசம்

Adhar Card update: இந்தியாவில் சுமார் 140 கோடி பேர் ஆதார் அட்டை வைத்திருக்கும் நிலையில், 100 கோடி பேர் மட்டுமே ஆதார் அட்டையை புதுப்பித்துள்ளனர். செப்டம்பர் 14ம் தேதிக்குள் ஆதார் அட்டையை அப்டேட் செய்ய வேண்டும் என்ற அரசின் அறிவிப்பை தொடர்ந்து ஆதார் மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஆதாரை புதுப்பிக்கவும், திருத்தம் செய்யவும் செப்டம்பர் 14 வரை கால அவகாசம்

ஆதார் கார்டு அப்டேட்

 அரசின் சலுகைகளைப் பெறுவதில் இருந்து பல முக்கிய ஆவணங்களைப் பெறுவதற்கு ஆதார் எண் ஒரு முக்கியத் தேவையாகும். இப்போது நாடு முழுவதிலும் 140 கோடியே 21 லட்சத்து 68 ஆயிரத்து 849 பேர் ஆதார் கார்டை பெற்றுள்ளனர். இதில் (101 கோடியே 50 பேர்) மட்டுமே ஆதார் கார்டையை புதுப்பித்துள்ளனர். எனவே ஆதார் அடையாள அட்டையை புதுப்பிக்க மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. ஏற்கனவே இரண்டு முறை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் செப்டம்பர் 14 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இதனால் பலர் ஆதார் மையத்திலும், ஆன்லைனிலும் ஆதார் அப்டேட் செய்ய வந்தனர். இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஆதாரை புதுப்பிக்கவும், திருத்தம் செய்யவும் செப்டம்பர் 14 வரை கால அவகாசம்
Adhar Card update

யாருக்கெல்லாம் ஆதார் அட்டை தேவை

யாருக்கு ஆதார் அட்டை தேவை?: ஆதார் மையத்தில் புகைப்படம், கைரேகை, கருவிழி, முகவரி மாற்றம், பெயர் மற்றும் பிறந்த தேதியை ஆதாரில் திருத்தம் செய்ய ரூ.50 வசூலிக்கப்படுகிறது. 

குறிப்பாக, 

இந்தியாவில் உள்ள எந்தவொரு நபரும், தனது பாலினம், வயது,  ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், ஆதார் எண்ணைப் பெற பதிவு செய்யலாம். ஆதார் எண் என்பது பிறப்பு கூட்டாளிகளின் முக்கிய தேவை.

தனி நபரின் பெயரில் ஆதார் எண் உருவாக்கப்படும். அந்த எண் மூலம் அந்த நபர் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற முடியும். ஒரு நபருக்கு ஒரு ஆதார் மட்டுமே உருவாக்கப்படும். ஆதார் அட்டையில் இந்திய குடிமகனின் பெயர், பிறந்த தேதி, பாலினம், வசிக்கும் முகவரி மற்றும் மொபைல் எண் ஆகிய விவரங்கள் உள்ளன.

ஆதார் எண் அப்பேட் ஏன்?

ஆதார் எண்ணை ஏன் புதுப்பிக்க வேண்டும்?: ஆதார் எண்ணை ஏன் புதுப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறியது, இன்னும் 10 ஆண்டுகளில் பலர் ஒரு ஊரை விட்டு வேறு இடங்களுக்குச் சென்றிருப்பார்கள். மேலும் முகவரி மாறியுள்ளதுடன் மொபைல் எண்ணும் மாறியுள்ளது. எனவே, சரியான தகவல்களைப் பெற ஆதார் எண்ணை புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தான் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் எண்ணை புதுப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தில் அல்லது  இந்த இணையதளம் https://myaadhaar.uidai.gov.in/ என்ற  மூலமாகவோ அப்டேட் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரை புதுப்பிக்கவும், திருத்தம் செய்யவும் செப்டம்பர் 14 வரை கால அவகாசம்
Adhar Card update

கட்டணம் இல்லாமல்  ஆதார் எண் புதுப்பிப்பு

கடந்த 10 நாட்களில் மட்டும் 55 லட்சம் பேர் ஆதாரை புதுப்பித்துள்ளனர். 35 கோடிக்கும் அதிகமானோர் இதுவரை தங்கள் ஆதார் எண்ணை புதுப்பிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆதார் எண்ணை புதுப்பிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதன்படி மத்திய அரசு இன்னும் 3 மாதங்களுக்குள் ஆதாரை இலவசமாக புதுப்பிக்கலாம். அதன்படி டிசம்பர் 14ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக