AMOLED டிஸ்பிளே, 45W சார்ஜிங், 50MP கேமரா, பட்ஜெட் விலையில் புது Samsung 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

AMOLED டிஸ்பிளே, 45W சார்ஜிங், 50MP கேமரா, பட்ஜெட் விலையில் புது Samsung 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் ,Samsung Galaxy M55s Specifications,சாம்சங் கேலக்ஸி

AMOLED டிஸ்பிளே, 45W சார்ஜிங், 50MP கேமரா, பட்ஜெட் விலையில் புது Samsung 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

Samsung நிறுவனம் அடுத்ததாக Samsung Galaxy M55s ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது இந்த புதிய சாம்சங் போனின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. இந்த புதிய சாம்சங் போனிலும் அதே டிரிபிள் கேமராக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கேமரா பகுதி மட்டும் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

அதேபோல், இந்த Samsung Galaxy M55S ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த பதிவில் ஆன்லைனில் கசிந்துள்ள Samsung Galaxy M55S ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.

Samsung Galaxy M55s Specifications

சாம்சங் கேலக்ஸி எம்55எஸ் அம்சங்கள்: அசத்தலான Samsung Galaxy M55s ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 1080 X 2400 பிக்சல்கள், 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 1000 nits உச்ச பிரகாசம் மற்றும் சிறந்த பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

AMOLED டிஸ்பிளே, 45W சார்ஜிங், 50MP கேமரா, பட்ஜெட் விலையில் புது Samsung 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

பிரமிக்க வைக்கும் Samsung Galaxy M55S ஸ்மார்ட்போனில் 50MP முதன்மை கேமரா + 8MP அல்ட்ரா-வைட் கேமரா + 2MP மேக்ரோ கேமரா மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இது தவிர, தொலைபேசியில் எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் கேமராக்கள் மற்றும் வடிவமைப்பில் சாம்சங் நிறுவனம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

Samsung Galaxy M55S ஃபோன் Qualcomm Snapdragon 7 Gen 1 சிப்செட் உடன் அறிமுகப்படுத்தப்படும். குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட செயல்திறனை வழங்கும். மேலும், இந்த போனில் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் உள்ளது. இருப்பினும், இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகள் உள்ளன.

AMOLED டிஸ்பிளே, 45W சார்ஜிங், 50MP கேமரா, பட்ஜெட் விலையில் புது Samsung 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

இந்த அற்புதமான Samsung Galaxy M55S ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உள்ளது. இந்த அற்புதமான ஸ்மார்ட்போன் நினைவக விரிவாக்கத்தையும் ஆதரிக்கிறது. நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Samsung Galaxy M55S ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி உள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்கள் சார்ஜ் செய்வதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. பின்னர் பேட்டரியை சார்ஜ் செய்ய 45W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய Samsung Galaxy M55S ஸ்மார்ட்போனில் 5G, 4G LTE, dual-band Wi-Fi, Bluetooth 5.2, NFC, USB Type-C port, GPS உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு உள்ளது. மேலும் இந்த புதிய போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


photo credit: smartprix

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக