தற்போது மோட்டோரோலா ஜி85 5ஜி ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் 14 சதவீத தள்ளுபடியில் ரூ.17,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உண்டு. எனவே இந்த போனை ரூ.16,999 விலையில் வாங்கலாம்.
Motorola G85 5G specifications
மோட்டோரோலா ஜி85 5ஜி அம்சங்கள்: மோட்டோரோலா ஜி85 5ஜி போன் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜெனரல் 3 (Snapdragon 6s Gen 3) சிப்செட்டுடன் வெளியிடப்பட்டது. மேலும், இந்த ஸ்மார்ட்போனில் Adreno 619 GPU (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது. குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ள சிப்செட் மேம்பட்ட செயல்திறனை வழங்கும்.
மேலும், மோட்டோரோலா ஜி85 5ஜி ஃபோனில் 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் வளைந்த பிஎல்இடி டிஸ்ப்ளே உள்ளது. இந்த மோட்டோரோலா ஜி85 5ஜி 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் வீதம், 1600 nits peak brightness 🔆மற்றும் சிறந்த கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
குறிப்பாக, இந்த மோட்டோரோலா ஜி85 5ஜி ஸ்மார்ட்போன் மாடலில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு உள்ளது. கூடுதலாக, இந்த போன் நினைவக விரிவாக்கத்தையும் ஆதரிக்கிறது. இந்த ஃபோனில் நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Motorola G85 5G ஆனது OIS ஆதரவு + 8MP அல்ட்ரா வைட் லென்ஸுடன் 50MP Sony LYT-600 முதன்மை கேமராவின் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த மோட்டோரோலா போனில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 32எம்பி கேமரா உள்ளது. இது தவிர, ஸ்மார்ட்போன் எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது.
தொலைபேசியில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. இது தவிர யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், டூயல் மைக்ரோஃபோன்கள் போன்றவையும் இந்த போனில் சப்போர்ட் செய்யப்பட்டுள்ளது.
மோட்டோரோலா ஜி85 5ஜி ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இந்த போனை வாங்கும் பயனர்கள் சார்ஜ் ஆவதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W டர்போ சார்ஜிங் வசதி உள்ளது. இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP54 மதிப்பீட்டையும் கொண்டுள்ளது.
இந்த போன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்துடன் வருகிறது. இருப்பினும், இந்த போன் ஆண்ட்ராய்டு அப்டேட் பெறும் என்று கூறப்படுகிறது. 5G SA/NSA, Dual 4G VoLTE, Wi-Fi 802.11 ac, ப்ளூடூத் 5.1 GPS, USB Type-C port சார்ஜ் செய்வதற்கான போர்ட் USB Type-C, NFC உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.


