ரிலீஸ் செய்யும் இயர்பட்ஸ்.. Realme அறிமுகம். என்ன விலை? என்ன அம்சங்கள்?
Realme ஆனது செப்டம்பர் 9, 2024 அன்று Realme Buds N1 எனப்படும் புதிய TWS இயர்பட்களை அறிமுகம் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய இயர்பட்ஸ் சாதனம் Realme இன் (Realme Narzo 70 Turbo 5G) ஸ்மார்ட்போனுடன் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. புதிய Realme Buds N1 சாதனத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன், நிறுவனம் இப்போது அது பற்றிய விவரங்களை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது.
Realme தனது புதிய Realme Buds N1 TWS இயர்பட்ஸை செப்டம்பர் 9, 2024 அன்று அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த நாளில், ஆப்பிள் தனது புதிய iPhone 16 தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது. ஆப்பிள் தனது புதிய ஏர்போட்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களையும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Realme Buds N1 TWS Earbuds
ரியல்மி பட்ஸ் N1 TWS இயர்பட்ஸ்: ஆப்பிள் தனது புதிய சாதனங்களை செப்டம்பர் 9 ஆம் தேதி அறிமுகப்படுத்துவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. இப்போது அதே நாளில், Realme அதன் புதிய ஸ்மார்ட்போன் மற்றும் இயர்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மக்களை எளிதில் ஈர்க்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. Realme ஆப்பிளுடன் நேருக்கு நேர் போட்டியிட முடியுமா என்பதை நாம் காத்திருந்து பார்க்க வேண்டும்.
Realme அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய Realme Buds N1 TWS இயர்பட்ஸ் (Realme Buds N1 TWS Earbuds) சாதனம் 12.4mm டைனமிக் பாஸ் டிரைவர்களுடன் கூடிய சக்திவாய்ந்த TWS இயர்பட்ஸ் மாடலாக இருக்கும். இது 360° ஸ்பேஷியல் ஆடியோ அம்சம், டைனமிக் சவுண்ட் எஃபெக்ட் மற்றும் துல்லியமான ஆடியோ அனுபவத்தை வழங்கக்கூடியது.
Realme விளம்பரத்தில் புதிய Realme Buds N1 இயர்பட்கள் 46dB ஹைப்ரிட் ஆக்டிவ் நோஸ் கேன்சலேஷன் (ANC) அம்சத்துடன் வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது 40 மணிநேரம் வரை பிளேபேக் நேரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது. சார்ஜிங் கேஸ் மூலம் இந்த பிளேபேக் நேரம் சாத்தியம் என்று Realme கூறுகிறது.
Realme Buds N1 TWS Earbuds Specifications
ரியல்மி பட்ஸ் N1 TWS இயர்பட்ஸ் சிறப்பம்சம்: இந்த புது Realme Buds N1 சாதனம் IP55 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு பாதுகாப்புடன் வருகிறது. இது ஒரு கவர்ச்சியான நியான் பச்சை நிறத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய (Realme Buds N1) சாதனத்தின் விலை ரூ. 3000க்குள் விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் பிரியர்களை குறிவைத்து தனது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் பழக்கத்தை Realme கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.