புது HMD போன் ரெடி. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?
இந்த புதிய HMD Sage ஸ்மார்ட்போன் நோக்கியா லூமியா போனின் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் இந்த வெளியீடு மேம்பட்ட பல்வேறு புதிய அம்சங்களுடன் வருகிறது. இப்போது ஆன்லைனில் கசிந்துள்ள இந்த HMD Sage ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.
HMD Sage Specifications
எச்எம்டி சேஜ் அம்சங்கள்: HMD Sage ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் முழு எச்டி பிளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்படும். மேலும் இதன் டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 1000 நிட்ஸ் பிரகாசம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்ப்ளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
Unisoc's T760 processor, HMD Sage ஸ்மார்ட்போன் வெளியிடப்படும். இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ள செயலி மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை வழங்குகிறது. மேலும், இந்த புதிய HMD போன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தின் அடிப்படையில் வெளிவரும். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ள செயலி மேம்பட்ட செயல்திறனை வழங்கும்.
HMD Sage ஸ்மார்ட்போன் 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப்புடன் வரும். எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 50எம்பி கேமராவும் உள்ளது. இது தவிர, ஸ்மார்ட்போனியில் எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன.
HMD சேஜ் போன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வகைகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த அற்புதமான ஸ்மார்ட்போன் நினைவக விரிவாக்கத்திற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது.
HMD Sage போன் 5000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்கள் சார்ஜ் செய்வதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதாவது இந்த போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
HMD Sage ஸ்மார்ட்போனில் ஐபி52 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஸ் ரெசிஸ்டண்ட் உள்ளது. இது 3.5mm ஆடியோ ஜாக், NFC, USB Type-C போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவையும் கொண்டுள்ளது. மேலும் இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


