தரமான 200MP கேமரா வசதியுடன் அறிமுகமாகும் Honor Magic 7 Pro பணத்தை ரெடி பண்ணி வச்சுக்கோங்க.!

தரமான 200MP கேமரா வசதியுடன் அறிமுகமாகும் Honor Magic 7 Pro பணத்தை ரெடி பண்ணி வச்சுக்கோங்க.!,Honor Magic 7 Pro ஸ்மார்ட்போனை அக்டோபர் 30 ஆம் தேதி சீனாவ
தரமான 200MP கேமரா வசதியுடன் அறிமுகமாகும் Honor Magic 7 Pro பணத்தை ரெடி பண்ணி வச்சுக்கோங்க.!

Honor தனது புதிய Honor Magic 7 Pro ஸ்மார்ட்போனை அக்டோபர் 30 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்த உள்ளது. குறிப்பாக, இந்த போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த போனின் அம்சங்களை ஆன்லைனில் கசிந்துள்ளதை இப்போது பார்க்கலாம்.

Honor Magic 7 Pro Specifications

ஹானர் மேஜிக் 7 ப்ரோ அம்சங்கள்: இந்த ஹானர் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 4 SoC (ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 SoC) சிப்செட்டுடன் வெளியிடப்படும். குறிப்பாக வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை வழங்குகிறது.

புதிய Honor Magic 7 Pro ஸ்மார்ட்போன் 6.2 இன்ச் 2K டூயல் லேயர் OLED டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்படும். மேலும், இதன் டிஸ்ப்ளே (120Hz புதுப்பிப்பு வீதம்), குன்லுன் கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

தரமான 200MP கேமரா வசதியுடன் அறிமுகமாகும் Honor Magic 7 Pro பணத்தை ரெடி பண்ணி வச்சுக்கோங்க.!

OmniVision OV50H ஆனது 50MP முதன்மை கேமரா + 50MP அல்ட்ரா வைட் கேமரா + 200MP சாம்சங் ISOCELL HP3 சென்சார் ஆகியவற்றின் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் துல்லியமான (புகைப்படங்கள்) மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

மேலும், இந்த போனில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 50எம்பி 3டி டெப்த் சென்சார் உள்ளது. இது தவிர, தொலைபேசியில் எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன. அல்ட்ராசோனிக் கைரேகை ஸ்கேனரும் இதில் உள்ளது.

Honor Magic 7 Pro ஆனது 5800mAh பேட்டரியுடன் வெளியிடப்படும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்கள் சார்ஜ் செய்வதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதாவது இந்த ஹானர் போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும். பின்னர் பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 66W வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது.

தரமான 200MP கேமரா வசதியுடன் அறிமுகமாகும் Honor Magic 7 Pro பணத்தை ரெடி பண்ணி வச்சுக்கோங்க.!

புதிய Honor Magic 7 Pro போனில் IP59 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஸ் ரெசிஸ்டண்ட் உள்ளது. மேலும் இந்த போன் MagicOS 9.0 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்துடன் வெளியிடப்படும். இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹானர் மேஜிக் 7 ப்ரோ 12ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பகத்துடன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பின்னர் இந்த போன் 5G, 4G VoltE, Wi-Fi, GPS, USB Type-C போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுடன் வெளிவரும். மேலும் Honor Magic 7 Pro போன் சற்று அதிக விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருத்துரையிடுக