ரிலையன்ஸ் ஜியோ இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024 இல் ஜியோபாரத் வி3 மற்றும் ஜியோபாரத் வி4 ஆகிய இரண்டு போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த போன்கள் பல அற்புதமான அம்சங்களுடன் மலிவு விலையில் வெளிவந்துள்ளன. இப்போது Jiobharat V3 மற்றும் Jiobharat V4 போன்களின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
Jiobharat v3 and Jiobharat v4 specifications
ஜியோபாரத் வி3 மற்றும் ஜியோபாரத் வி4 அம்சங்கள்: இந்த புதிய ஃபிளாக்ஷிப் போன்கள் 4ஜி ஆதரவுடன் வருகின்றன. எனவே இந்த தொலைபேசிகள் குரல் அழைப்புகளுக்கு சிறந்தவை. இந்த ஜியோ போன்களில் UPI அடிப்படையிலான டிஜிட்டல் பேமெண்ட்டுகளை மேற்கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், நிறுவனத்தின் பயன்பாடுகளான JioTV, JioCinema மற்றும் JioPay ஆகியவை JioBharat V3 மற்றும் JioBharat V4 போன்களில் பயன்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஃபோன்கள் வீடியோ ஸ்ட்ரீமிங் போன்ற அம்சங்களுடன் வெளிவருவதால், அவற்றைப் பயன்படுத்த சிறந்ததாக ஆக்குகிறது.
JioBharat V3, JioBharat V4 போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
ஜியோபாரத் வி3 மற்றும் ஜியோபாரத் வி4 போன்கள் டிஎஃப்டி டிஸ்ப்ளேவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இரண்டு போன்களிலும் T9 கீபோர்டுகள் உள்ளன. மேலும் இந்த அற்புதமான ஜியோ போன்கள் 23 இந்திய மொழிகளை ஆதரிக்கின்றன. மேலும் இந்த போன்களின் வடிவமைப்பு அருமையாக உள்ளது.
ஜியோ அறிமுகப்படுத்திய புதிய பீச்சர் போன்கள் 1000எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன்களில் நாள் (முழுவதும் தடையில்லா) சேவையை உறுதி செய்கின்றன. அதாவது இந்த போன்கள் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்குகின்றன. மேலும் 128ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டுகளைப் பயன்படுத்த SD கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், இந்த JioPharat V3 மற்றும் JioPharat V4 ஃபோன்களில் பின்பக்க கேமராக்கள் உள்ளன, அவை புகைப்படங்களைக் கிளிக் செய்ய உதவுகின்றன, ஆனால் அதை விட, ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கு அவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அதாவது பயனர்கள் QR குறியீடுகளை ஸ்கேன் செய்து வசதியாக பணம் அனுப்பலாம்.
ஜியோபாரத் வி3 மற்றும் ஜியோபாரத் வி4 போன்களின் விலை ரூ.1099 என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில், இது ஜியோமார்ட் மற்றும் அமேசான் ஆகியவற்றில் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து சிறப்பான அம்சங்களையும் கொண்ட இந்த போன்கள் மலிவு விலையில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023ல் வெளியான ஜியோபாரத் வி2 போன் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த போனின் வெற்றியை தொடர்ந்து ஜியோபாரத் வி3 மற்றும் ஜியோபாரத் வி4 போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜியோ விரைவில் இந்தியாவில் பல அற்புதமான சாதனங்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

