தள்ளுபடியில் Poco X6 Pro 5G வாங்க சரியான தருனம் இதுதான்.

தள்ளுபடியில் Poco X6 Pro 5G வாங்க சரியான தருனம் இதுதான்.,போக்கோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி அம்சங்கள்: இந்த ஃபோன் 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன்
தள்ளுபடியில் Poco X6 Pro 5G வாங்க சரியான தருனம் இதுதான்.

Poco X6 Pro 5G ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, 67W சார்ஜிங், டிரிபிள் ரியர் கேமரா, 5000mAh பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தது. இப்போது Poco X6 Pro 5G போனுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் அதன் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம்.

அதாவது, Poco X6 Pro 5G ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 1000 ரூபாய் தள்ளுபடியும் உண்டு. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.19,999 விலையில் வாங்கலாம்.

Poco X6 Pro 5G specifications

போக்கோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி அம்சங்கள்: இந்த ஃபோன் 6.67 இன்ச் AMOLED  டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, 2712 x 1220 பிக்சல்கள், 1.5 கே ரெசல்யூஷன், 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1920 ஹெர்ட்ஸ் டச் சாம்லிங் ரேட், எச்டிஆர்10+, டால்பி விஷன் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

Poco X6 Pro 5G போன் Octa Core MediaTek Dimensity 8300 Ultra 4nm சிப்செட்டுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறனை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட கேமிங் அனுபவத்தையும் வழங்குகிறது.

இந்த போன் Xiaomi HyperOS அடிப்படையிலான Android 14 OS இல் இயங்குகிறது. இருப்பினும், இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும். இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பில் சியோமி சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.

இந்த அற்புதமான Poco X6 Pro 5G ஸ்மார்ட்போனில் 64 MP பிரதான கேமரா + 8 MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா + 2 MP மேக்ரோ கேமரா ஆகியவற்றின் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. எனவே, இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் நீங்கள் அற்புதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கலாம். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 16 எம்பி கேமராவும் உள்ளது.
தள்ளுபடியில் Poco X6 Pro 5G வாங்க சரியான தருனம் இதுதான்.

இது தவிர, இந்த Poco X6 Pro 5G ஸ்மார்ட்போனில் போர்ட்ரெய்ட் மோட், நைட் மோட், மூவி பிரேம், வாய்ஸ் ஷட்டர், 4கே ரெக்கார்டிங், பாம் ஷட்டர், வாய்ஸ் ஷட்டர், போர்ட்ரெய்ட், ஷார்ட் வீடியோ, வ்லாக் மோட் உள்ளிட்ட பல்வேறு கேமரா வசதிகள் உள்ளன. குறிப்பாக, இந்த போனில் அண்டர் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் அகச்சிவப்பு சென்சார் உள்ளது.

இந்த Poco ஃபோன் ஹை-ரெஸ் ஆடியோ மற்றும் டால்பி அட்மோஸ் ஆதரவுடன் இரட்டை ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. எனவே நீங்கள் சிறந்த ஆடியோ அனுபவத்தைப் பெறுவீர்கள். இந்த அற்புதமான ஸ்மார்ட்போனில் IP54 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஸ் ரெசிஸ்டண்ட் உள்ளது.

இந்த Poco X6 Pro 5G ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்குகிறது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்யலாம். இந்த Poco மாடலில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி நினைவகம் உள்ளது.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக