![]() |
| 6.52-இன்ச் டிஸ்பிளேவுடன் அட்டகாசமான HMD Key ஸ்மார்ட்போன் அறிமுகம்.! |
எச்எம்டி தனது புதிய HMD Key ஸ்மார்ட்போனை உலக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மலிவு விலையில் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களை கொண்டுள்ளது. இப்போது இந்த பதிவில் (HMD Key) ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.
HMD Key Specifications
எச்எம்டி கீ அம்சங்கள்: இந்த HMD Key ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் எச்டி டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே 1280 X 576 பிக்சல்கள், 460 nits பிரகாசம், 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 20:9 விகிதம் உள்ளிட்ட பல்வேறு காட்சி அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த போனின் டிஸ்ப்ளே சிறந்த பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது.
இந்த HMD Key ஸ்மார்ட்போன் தரமான Unisoc 9832E chipset (யுனிசாக் 9832இ சிப்செட்) உடன் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறனை வழங்குகிறது. இந்த புதிய எச்எம்டி போன் ஆண்ட்ராய்டு 14 கோ எடிசனுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த HMD Key ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பகத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த அற்புதமான ஸ்மார்ட்போன் நினைவக விரிவாக்க ஆதரவு உள்ளது. அதாவது, நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. அதேபோல் இந்த போனின் டிசைனும் மிக அழகாக இருக்கிறது.
இந்த HMD Key ஸ்மார்ட்போன் எல்இடி ப்ளாஷ் ஆதரவுடன் 8எம்பி கேமராவுடன் வெளியாகியுள்ளது. இந்த போனில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 5எம்பி கேமராவும் உள்ளது. இதேபோல், இந்த போனின் கேமராக்கள் போர்ட்ரெய்ட், நைட், ஸ்லோ மோஷன், டைம் லேப்ஸ் மற்றும் பனோரமா உள்ளிட்ட பல இமேஜிங் முறைகளை ஆதரிக்கின்றன.
![]() |
| 6.52-இன்ச் டிஸ்பிளேவுடன் அட்டகாசமான HMD Key ஸ்மார்ட்போன் அறிமுகம்.! |
புதிய HMD Key ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளியாகியுள்ளது. எனவே இந்த போன் 1 நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போனில் 10W சார்ஜிங் வசதி உள்ளது. இந்த பிரமிக்க வைக்கும் ஸ்மார்ட்போனில் IP52 ஸ்பிளாஸ் ரெசிஸ்டன்ஸ் (ஸ்பிளாஸ் ரெசிஸ்டன்ஸ்க்கான IP52 ரேட்டிங்) உள்ளது.
இந்த HMD Key ஸ்மார்ட்போனில் 4ஜி, வைஃபை, புளூடூத் 5.4, எஃப்எம், ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், கலிலியோ மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு உள்ளது. இந்த போன் ஐசி புளூ மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போனின் எடை 185.4 கிராம்.
இதேபோல், HMD Key ஸ்மார்ட்போனின் விலை ரூ. 6,300. இந்த புதிய HMD Key ஸ்மார்ட்போன் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய எச்எம்டி போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


