Vivo X200 Ultra சம்பவம் செய்ய காத்திருக்கு ? 6000mAh பேட்டரி.. 200எம்பி கேமரா.. வருகிறது

Vivo X200 Ultra சம்பவம் செய்ய காத்திருக்கு ? 6000mAh பேட்டரி.. 200எம்பி கேமரா.. வருகிறது,Vivo X200 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 50MP சோனி LYT818 முன்
Vivo X200 Ultra சம்பவம் செய்ய காத்திருக்கு ? 6000mAh பேட்டரி..  200எம்பி கேமரா.. வருகிறது

Vivo இந்த ஆண்டு (மார்ச் அல்லது ஏப்ரல்) மாதத்தில் Vivo X200 அல்ட்ரா ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு Vivo X200 மற்றும் X200 Pro ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இது இரண்டாவது Vivo X200 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆகும்.

Vivo X200 Ultra ஸ்மார்ட்போன் ஒரு தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும் என கூறப்படுகிறது. இந்நிலையில் விவோ எக்ஸ்200 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளன. அதைப் பற்றிய விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

Vivo X200 Ultra Specifications

விவோ எக்ஸ்200 அல்ட்ரா அம்சங்கள்: Vivo X200 Ultra ஸ்மார்ட்போன் 6.82 இன்ச் 2K OLED டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்படும். இதன் டிஸ்ப்ளே 5000 நிட்ஸ் பிரகாசம், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் சிறந்த பாதுகாப்பையும் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்ப்ளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

இதேபோல், விவோ எக்ஸ்200 அல்ட்ரா ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இந்த போனில் எந்த பிரச்சனையும் இல்லாமல் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Vivo X200 Ultra சம்பவம் செய்ய காத்திருக்கு ? 6000mAh பேட்டரி..  200எம்பி கேமரா.. வருகிறது

Vivo X200 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 50MP சோனி LYT818 முதன்மை கேமரா + 200MP டெலிஃபோட்டோ லென்ஸ் + 50MP மேக்ரோ கேமரா ஆகியவற்றின் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. எனவே, இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கலாம். இது தவிர, இந்த போனில் பல்வேறு அசத்தலான கேமரா அம்சங்கள் உள்ளன.

இந்த பிரமிக்க வைக்கும் ஸ்மார்ட்போனில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 50எம்பி கேமராவும் உள்ளது. குறிப்பாக, Vivo X200 Ultra போன் 24GB வரையிலான ரேம் மற்றும் 2TB வரையிலான சேமிப்பகத்திற்கான ஆதரவுடன் வெளியிடப்படும். இந்த போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது.

Vivo X200 அல்ட்ரா ஸ்மார்ட்போன் IP69+IP68 தூசி மற்றும் நீர் எதிர்ப்புடன் வருகிறது. மேலும் இந்த போன் ப்ளூடூத் 5.4ஐ ஆதரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Vivo X200 Ultra போனிலும் 5G, USB Type-C port, Wi-Fi, GPS உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Vivo X200 Ultra போன் 6000mAh பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்படும். பின்னர், இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு உள்ளது. குறிப்பாக, இந்த போனை வாங்கும் பயனர்கள் சார்ஜ் செய்வதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதாவது இந்த போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும். இதேபோல் Vivo X200 Ultra போன் சற்று அதிக விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஆதாரம், photo credit: 91mobiles, JohnnyManuel, gizbot.com

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக