vivo Y200e 5G ஸ்மார்ட்போன், பிளிப்கார்ட்டில் தள்ளுபடி விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த vivo Y200e 5G போனில் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் சலுகைகள் மற்றும் சிறப்பு அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.
அதாவது, தற்போது பிளிப்கார்ட்டில், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட விவோ Y200e 5G ஸ்மார்ட்போன் ரூ. 19,999 விலையில் 16 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகளைப் பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ. 1000 தள்ளுபடியும் உண்டு. எனவே நீங்கள் இந்த போனை ரூ. 18,999 விலையில் வாங்கலாம்.
vivo Y200e specifications
விவோ ஒய்200இ 5ஜி அம்சங்கள்: இந்த போனில் 50MP மெயின் கேமரா + 2 எம்பி பொக்கே கேமரா + ஃப்ளிக்கர் சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 16 எம்பி கேமராவுடன் இந்த போன் வெளியிடப்பட்டுள்ளது. இது தவிர, இது LED ஃபிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களையும் கொண்டுள்ளது.
இதேபோல், Vivo Y200e 5G ஸ்மார்ட்போன் 6.77-இன்ச் முழு HD பிளஸ் AMOLED (FHD+ AMOLED) பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே 120 Hz புதுப்பிப்பு வீதம், 1800 nits பிரகாசம் மற்றும் சிறந்த பாதுகாப்பைக் கொண்டுள்ளது.
இந்த Vivo ஸ்மார்ட்போனில் 6GB RAM மற்றும் 128GB மெமரி உள்ளது. கூடுதலாக, இந்த அற்புதமான ஸ்மார்ட்போன் மெமரி விரிவாக்க ஆதரவைக் கொண்டுள்ளது. நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ SD கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Vivo Y200E 5G ஸ்மார்ட்போன் Snapdragon 4 Gen 2 (ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2) சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Vivo Y200E 5G ஸ்மார்ட்போன் தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP54 மதிப்பீட்டையும் பெற்றுள்ளது.
Vivo Y200E 5G ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மற்றும் 44W வேகமான சார்ஜிங்குடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவோ ஃபோனில் 5G, டூயல் 4G VoLTE, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு உள்ளது.
குறிப்பாக, விவோ Y200E 5G ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 உடன் வெளிவரும். இருப்பினும், இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அற்புதமான vivo Y200E 5G போனில் யூஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் உள்ளன.