குறைந்த பட்ஜெட்டில் மிலிட்டரி கிரேடு வழங்குவதோடு மட்டுமல்லாமல், IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட், கேலக்ஸி கோர் சென்சார் பிரதான கேமரா, 5100mAh பேட்டரி மற்றும் 45W SuperWow வேகமான சார்ஜிங் போன்ற அம்சங்களையும் வழங்கும் OPPO K12x 5G போன் தள்ளுபடியில் கிடைக்கிறது. 7.68 மிமீ அல்ட்ரா-ஸ்லிம் உடலை வழங்கும் இந்த OPPO K12x 5G போனின் முழு அம்சங்கள், விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை இப்போது நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
இந்த போன் MIL-STD-810H சான்றளிக்கப்பட்ட "மிலிட்டரி கிரேடு புரொடெக்சன்" கொண்டுள்ளது, எனவே இது 360 டிகிரி டேமேஜ் ஃப்ரூப் பெறுகிறது. இது IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் 'மற்றும்' வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது. எனவே, ஸ்பிளாஸ் டச் கிடைக்கிறது. இதன் மூலம், "டிஸ்ப்ளேவில் வெட் டச் சப்போர்ட்" ஆதரவு கிடைக்கிறது. இது அதிக நீடித்து உழைக்கும் மாடலாக வருகிறது.
OPPO K12x 5G Specifications
ஓப்போ கே12எக்ஸ் 5ஜி அம்சங்கள்: தரமான உடல் காரணமாக, டிஸ்ப்ளே பாண்டா கிளாஸ் பாதுகாப்பையும் பெறுகிறது. இது 6.67-இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) LCD டிஸ்ப்ளே, HD+ தெளிவுத்திறன் மற்றும் 1000 nits உச்ச பிரகாசத்தைக் கொண்டுள்ளது. இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வீதம் மற்றும் 264 PPI பிக்சல் அடர்த்தியுடன் வருகிறது.
இது 120Hz டச் சாம்பிளிங் ரேட் 16.7 மில்லியன் கலர் டெப்த் வழங்குகிறது. எனவே, பட்ஜெட்டை விட அதிக செயல்திறன் கொண்ட காட்சியை நீங்கள் காணலாம். இந்த Oppo K12X 5G போன் 6 GB RAM + 128 GB மெமரி அல்லது 8 GB RAM + 256 GB மெமரி கொண்ட 2 வகைகளில் கிடைக்கிறது. 8 GB RAM விரிவாக்கம் கிடைக்கிறது.
Octa Core MediaTek Dimensity 6300 6nm சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட் 2025 இல் வெளியிடப்பட்ட பல பட்ஜெட் மாடல்களில் அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால், இந்த போன் ஒரு வருடத்திற்கு முன்பு வெளியிடப்பட்டிருந்தாலும் இந்த சிப்செட் கொண்டுள்ளது. இது Color OS 14, Android OS 14 ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்த Oppo K12X 5G போனின் மற்றொரு சிறப்பம்சமாக பேட்டரி அமைப்பு உள்ளது. ஏனெனில், 5100mAh பேட்டரி 45W SuperVOOC வேகமான சார்ஜிங்குடன் கிடைக்கிறது. இந்த பேட்டரி இருந்தபோதிலும், இது 7.68 மிமீ தடிமன் மற்றும் 186 கிராம் மெலிதான தோற்றத்தை அளிக்கிறது. 32 MP பிரதான கேமரா + 2 MP இரண்டாம் நிலை கேமரா + 8 MP செல்ஃபி கேமரா கிடைக்கிறது.
பிரதான மற்றும் செல்ஃபி ஷூட்டர்கள் Galaxy Core சென்சார்களுடன் வருகின்றன. நீங்கள் இதை Breeze Blue அல்லது Midnight Violet வண்ணங்களில் ஆர்டர் செய்யலாம். 6 GB RAM + 128 GB மெமரி கொண்ட இந்த Oppo மாடலின் சந்தை விலை ரூ. 12,999. 8 GB RAM + 256 GB மெமரி கொண்ட மாடலின் விலை ரூ. 15,999.
இப்போது, 2 மாடல்களுக்கு ரூ. 1,000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடி Flipkart விற்பனையில் கிடைக்கிறது. எனவே, சிறந்த டிஸ்ப்ளே மற்றும் பேட்டரியை மட்டுமல்லாமல், அதிக நீடித்து உழைக்கும் திறனையும் வழங்கும் இந்த Oppo K12X 5G போனை ரூ. 12,999 பட்ஜெட்டில் வாங்கலாம். இதுபோன்ற மேலும் செய்திகளுக்கு எங்களைப் பின்தொடரவும்.
