Hisense Xplorer X1 Ultra Laser TV Specifications
ஹைசென்ஸ் எக்ஸ்ப்ளோரர் எக்ஸ்1 அம்சங்கள்: இந்த புதிய 100 அங்குல, 120 அங்குல, 139 அங்குல மற்றும் 150 அங்குல ஸ்மார்ட் டிவிகள் இரட்டை MCL39 ட்ரை-கலர் RGB லேசர் லைட் எஞ்சின்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த டிவிகளின் காட்சி 1000 நிட் முழு பிரகாசத்தை வழங்கும்.
இதேபோல், இந்த புதிய டிவிகள் BT.2020 கலர் காமட், 5000:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ, டால்பி விஷன் போன்ற காட்சி அம்சங்களுடன் IMAX மேம்படுத்தப்பட்ட ஆதரவை வழங்குகின்றன. பின்னர், MEMC என சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்சேஷன் தொழில்நுட்பம், ஹைசென்ஸ் எக்ஸ்ப்ளோரர் X1 மாடல்களிலும் ஆதரிக்கப்படுகிறது.
இந்த புதிய ஹைசென்ஸ் டிவிகள் DMD சிப் ஆதரவுடன் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, இது துல்லியமான வீடியோக்களைப் பார்க்க உங்களை அனுமதிக்கிறது. ஹைசென்ஸ் இந்த டிவிகளின் பாதுகாப்பு அம்சங்களிலும் அதிக கவனம் செலுத்தியுள்ளது.
இந்த ஹைசென்ஸ் எக்ஸ்ப்ளோரர் X1 டிவிகள் சக்திவாய்ந்த மீடியாடெக் MT9655 சிப்செட்டுடன் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை வழங்குகிறது. இதேபோல், இந்த புதிய ஹைசென்ஸ் டிவி மாடல்கள் 4GB ரேம் மற்றும் 1TB வரை நினைவக ஆதரவைக் கொண்டுள்ளன.
இந்த புதிய டிவிகள் ஹர்மன் கார்டனுடன் இணைந்து உருவாக்கப்பட்ட 9.1.4-சேனல் ஆடியோ அமைப்பைக் கொண்டுள்ளன. இந்த டிவிகள் 206W வரை ஒலி வெளியீட்டை வழங்குகின்றன. இந்த டிவிகள் டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ உள்ளிட்ட ஆடியோ அம்சங்களையும் கொண்டுள்ளன. இந்த டிவிக்கள் தியேட்டர் போன்ற அனுபவத்தை வழங்குவதாகக் கூறலாம்.
ஹைசென்ஸ் எக்ஸ்ப்ளோரர் எக்ஸ்1 டிவிகள் டீப்சீக் AI அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன. இந்த புதிய டிவிகள் குரல் கட்டுப்பாட்டு ஆதரவையும் வழங்குகின்றன. இந்த டிவிகள் வைஃபை 7 மற்றும் 4K மேக்ஸ் உயர்-பிட்ரேட் பிளேபேக்குடனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த புதிய ஹைசென்ஸ் எக்ஸ்ப்ளோரர் எக்ஸ்1 மாடல்கள் HDMI 2.1 போர்ட், USB 3.0 போர்ட், ஈதர்நெட் லேன், ஆப்டிகல், கோஆக்சியல் ஆடியோ அவுட் மற்றும் ஆண்டெனா உள்ளீடு உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவைக் கொண்டுள்ளன. இந்த டிவிகள் டேப்-டு-காஸ்ட் ஸ்மார்ட்போன் மிரரிங்கையும் ஆதரிக்கின்றன. பின்னர், இந்த டிவிகளுடன் ரிமோட் கிடைக்கும்.
உலகின் முதல் 150-இன்ச் டிவி.. 1TB மெமரி.. டால்பி விஷன்.. விலை என்ன?
ஆனால் ஹைசென்ஸ் எக்ஸ்ப்ளோரர் எக்ஸ்1 டிவி மாடல்கள் இப்போது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த டிவிகள் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த புதிய டிவிகளின் விலையைப் பார்ப்போம்.
Hisense Xplorer X1 விலை:
Hisense Xplorer X1 150-இன்ச் டிவியின் விலை 99,999 யுவான் (INR 12,39,335)
Hisense Xplorer X1 139-இன்ச் டிவியின் விலை 79,999 யுவான் (INR 9,91,466)
Hisense Xplorer X1 120-இன்ச் டிவியின் விலை 69,999 யுவான் (INR 8,67,531)
Hisense Xplorer X1 100-inch TVயின் விலை 49,999 யுவான் (INR 6,19,661)