Tecno - ஸ்மார்ட்போனுக்கு ரூ. 6,000 தள்ளுபடி

Tecno - ஸ்மார்ட்போனுக்கு ரூ. 6,000 தள்ளுபடி,Tecno POP 9 5G Get More Than Rs 6000 Discount in Amazon Great Indian Festival Sale 2025,

Tecno - ஸ்மார்ட்போனுக்கு ரூ. 6,000 தள்ளுபடி

அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் நடக்கும் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2025 (Great Indian Festival Sale 2025) விற்பனையின் ஒரு பகுதியாக.. ஏற்கனவே பட்ஜெட் விலைப்பிரிவின் கீழ் அறிமுகமான டெக்னோ நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்று ரூ.6000 க்கு மேலான விலை குறைப்பை பெற்று இன்னும் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tecno - ஸ்மார்ட்போனுக்கு ரூ. 6,000 தள்ளுபடி

அது டெக்னோ பாப் 9 5ஜி (Tecno POP 9 5G) ஸ்மார்ட்போன் ஆகும். கடந்த ஜனவரி 2025 இல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த டெக்னோ 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது அமேசான் இந்தியா வலைதளத்தில் உள்ள "மொபைல்கள் மீதான ஆபர்" பக்கத்தில் ரூ.8,550 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டு உள்ளது.

அதாவது டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போனானது அதன் எம்ஆர்பி விலையான ரூ.14,999 இல் இருந்து ரூ.6449 விலை குறைப்பின் கீழ் வாங்க கிடைக்கும். இது வங்கி தள்ளுபடியை (Bank Discount) உள்ளடக்கிய விலையாக இருக்கும் என்பதையும் அமேசான் இந்தியா வலைத்தளம் குறிப்பிட்டு உள்ளது.

சுவாரசியமாக இந்த டிஸ்கவுண்ட் டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போனின் 3 கலர் ஆப்ஷன்கள் மீதும் கிடைக்கும்: மிட்நைட் ஷேடோ (Midnight Shadow), அஸூர் ஸ்கை (Azure Sky) மற்றும் அரோரா க்ளவுட் (Aurora Cloud) ஆகிய கலர் ஆப்ஷன்கள் மீது கிடைக்கும்.

அமேசானின் இந்த ஆபர் டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மீதான ஆபர் ஆகும். முன்னதாக அறிமுகமான 4ஜிபி ரேம் வேரியண்ட்களில் 8ஜிபி வரையிலான மெமரி ஃப்யூஷன் தொழில்நுட்பத்தின் (Memory Fusion Technology) கீழ் அதிகபட்சம் 12ஜிபி வரையிலான ரேம் கிடைத்தது. ஆனால் 8ஜிபி ரேம் ஆப்ஷனின் கீழ் அதே 8ஜிபி மெமரி ஃப்யூஷன் டெக்னாலஜியின் கீழ் மொத்தம் 16ஜிபி ரேம் கிடைக்கும்.

Tecno - ஸ்மார்ட்போனுக்கு ரூ. 6,000 தள்ளுபடி
டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆக இருந்தாலும் கூட இதன் பாடி ஆனது நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங் (IP54 Rating Dust and Water Proof) உடன் வருகிறது. இந்த ரேட்டிங்கால் லேசான தூறல்கள் மற்றும் நீர் தெறிப்பிற்கு எதிராக செயல்பட முடியும்

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.6 இன்ச் எல்சிடி பேனலை (66.-inch LCD Display) கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இது மீடியாடெக் டைமன்சிட்டி 6030 சிப்செட் (MediaTek Dimensity 6300 SoC) உடன் வருகிறது. முன்னரே குறிப்பிட்டபடி டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் (128B Internal Storage) உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, இது 48எம்பி சோனி ஏஐ ரியர் கேமரா (48MP AI Rear Camera) மற்றும் முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமராவை (8MP Selfie Camera) கொண்டுள்ளது பேட்டரி மற்றும் பாஸ்ட் சர்ஜிங்கை பொறுத்தவரை, டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது. சுவாரசியமாக இந்த ஸ்மார்ட்போனில் என்எப்சி (NFC) ஆதரவு மற்றும் டூயல் டால்பி அட்மோஸ் ஸ்பீக்கர்களையும் (Dual Dolby Atmos Speakers) கொண்டுள்ளது.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக