மிரளுது பட்ஜெட்.. வெறும் ரூ.35,000 ரேஞ்ச்.. 24GB ரேம்.. 8300mAh பேட்டரி.. 66W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்த ஹானர் ஸ்மார்ட்போன் மலேசிய சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. இது 12GB RAM + 12GB மெய்நிகர் RAM ஐ வழங்குகிறது. எனவே, இது 24GB RAM + 256GB நினைவகம் மற்றும் 24GB RAM + 512GB நினைவகம் ஆகியவற்றை வழங்குகிறது. இது பிரீமியம் டிரிபிள் ரெசிஸ்டண்ட் பில்ட் தரத்தை வழங்குகிறது. இது டிராப், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் ஆகும்.
எனவே, 2.5 மீட்டர் டிராப் ரெசிஸ்டண்ட் கிடைக்கிறது. IPX9K ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. மேலும், IP6X டஸ்ட் ரெசிஸ்டன்ஸ், கிடைக்கிறது. எனவே, கிட்டத்தட்ட இராணுவ தர நீடித்துழைப்பை எதிர்பார்க்கலாம். இது காட்சி, கேமரா, பேட்டரி மற்றும் சிப்செட் அம்சங்களிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
HONOR X9d Specifications
ஹானர் எக்ஸ்9டி அம்சங்கள்: இந்த ஹானர் ஸ்மார்ட்போன் 6.79-இன்ச் (2640 x 1200) OLED டிஸ்ப்ளேவை 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 1800 நிட்ஸ் எச்பிஎம், மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், கொண்டுள்ளது. மேலும், 1.5K தெளிவுத்திறன், DCI P3 சினிமா தர வண்ண வரம்பு கிடைக்கிறது.
இது 3840Hz PWM மங்கலான தன்மையையும் கொண்டுள்ளது. இது ஒரு சூப்பர் டைனமிக் விவிட் டிஸ்ப்ளே மாடல். எனவே, நீங்கள் பிரீமியம் தரமான வெளியீட்டை எதிர்பார்க்கலாம். இந்த ஹானர் X9T ஸ்மார்ட்போன் 108 MP பிரதான கேமராவுடன் வருகிறது. இந்த கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உள்ளது.
மேலும், எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்கிறது. இந்த கேமராவில் அண்டர்வாட்டர் ஃபோட்டோ மோட் மற்றும் 4K HD மூவிங் ஃபோட்டோ கொலாஜ் போன்ற அம்சங்கள் உள்ளன. கூடுதலாக, AI ஸ்டார் ஃபோட்டோ எடிட்டிங் கிடைக்கிறது.
AI அழிப்பான், AI ஐஸ் ஓபன், AI ரிமூவ் ரிஃப்ளெக்ஷன், AI கட்அவுட் மற்றும் AI அப்ஸ்கேல் போன்ற அம்சங்கள் கிடைக்கின்றன. இதனுடன் இணைந்து MagicOS 9.0 கிடைக்கிறது. Android 15 OS வழங்கப்படுகிறது.
இந்த Honor X9T ஸ்மார்ட்போனில் Octa Core Snapdragon 6 Gen 4 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. 16 MP செல்ஃபி கேமரா உள்ளது. 8,300mAh பேட்டரி, 66W சார்ஜிங் வசதி உள்ளது. 12 GB RAM + 256 GB மெமரி மாடலின் விலை ரூ. 31,505, மற்றும் 12 GB RAM + 512 GB மெமரி மாடலின் விலை ரூ. 35,708.