இந்த சூழ்நிலையில், போகோ எம்7 பிளஸ் 5ஜி போனின் புதிய வகை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதாவது, செப்டம்பர் 23 அன்று (Flipkart Big Billion Days) பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை என்ற நடைபெறும். இந்த விற்பனையில் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட Poco M7 Plus 5G மாடல் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட Poco M7 Plus 5G போன் ரூ. 13,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், அதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 14,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் 4GB RAM + 128GB சேமிப்பு கொண்ட Poco M7 Plus 5G மாடல் இன்னும் குறைந்த விலையில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. அதாவது, இந்த புதிய வேரியண்ட் ரூ. 10,000 பட்ஜெட்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Poco M7 Plus 5G specifications
போக்கோ எம்7 பிளஸ் 5ஜி அம்சங்கள்: Poco M7 Plus 5G ஸ்மார்ட்போன் (Qualcomm Snapdragon 6s Gen 3 6nm 5G SoC) குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 6என்எம் 5 எஸ்ஒசி சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேமிங் பயனர்களை ஈர்க்க இந்த Poco ஸ்மார்ட்போனில் (Adreno 619 GPU) அட்ரினோ 619 ஜிபியு கிராபிக்ஸ் கார்டும் உள்ளது.
Poco M7 Plus 5G போன் 6.9-இன்ச் முழு HD Plus LCD டிஸ்ப்ளேவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன் 144 Hz ரெஃப்ரெஷ் ரேட், 550 nits பீக் ப்ரைட்னஸ், (Corning Gorilla Glass 3 protection) கார்னிங் கொரில்லா கிளாஸ் 3பாதுகாப்பு உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது.
Poco M7 Plus 5G ஸ்மார்ட்போன் (Android 15) ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான (HyperOS) ஹைப்பர்ஓஎஸ் இயக்க முறைமையை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த போன் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்களைப் பெறும். இந்த புதிய போக்கோ போன், (Side mounted Fingerprint Sensor) சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் (Infrared Sensor) இன்பிராரெட் சென்சார் ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
போக்கோ M7 பிளஸ் 5G ஸ்மார்ட்போன், 50MP பிரைமரி கேமரா + செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 8MP கேமராவையும் கொண்டுள்ளது. இது தவிர, இந்த போன் LED ஃபிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது.
போக்கோ M7 பிளஸ் 5G, 7000mAh பேட்டரியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய இது 33W வேகமான சார்ஜிங் மற்றும் 18W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. இந்த போனை Chrome Silver, Aqua Blue மற்றும் Carbon Black நிறங்களில் வாங்கலாம்.
இந்த போக்கோ போன் (Dust and splash resistant) IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும், இந்த போன் 5G, Dual 4G VoLTE, Wi-Fi 6 802.11 ac, Bluetooth 5.1, GPS + GLONASS, USB Type-C உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவைக் கொண்டுள்ளது. இதேபோல், இந்த போனின் எடை 217 கிராம்.