6000mAh பேட்டரி, 50MP கேமரா.. புது Vivo 5ஜி போன்! எந்த மாடல்?
புதிய விவோ வி60 லைட் 5ஜி போனில் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே உள்ளது. பின்னர் இந்த போனின் பின்புறத்தில் இரண்டு கேமராக்கள் உள்ளன. இந்த போனின் வடிவமைப்பில் விவோ சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.
Vivo V60 Lite 5G Specifications
இதேபோல், (Vivo V60 Lite 5G ) ஸ்மார்ட்போனில் (MediaTek's Dimensity 7300 chip) மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட், உடன் அறிமுகப்படுத்தப்படும். இந்த போனில் மாலி கிராபிக்ஸ் கார்டும் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பிக்கையுடன் வாங்கலாம். அதாவது இந்த போன் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும்.
Vivo V60 Lite 5G, போனில் 50MP பிரதான கேமரா + 2MP டெப்த் சென்சார் கொண்ட இரண்டு பின்புற கேமரா அமைப்புடன் அறிமுகப்படுத்தப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் நீங்கள் அற்புதமான படங்களை எடுக்கலாம். செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு இந்த போனில் '32MP' கேமராவும் உள்ளது.
Vivo V60 Lite 5G ஸ்மார்ட்போன் "Funtouch OS 15" ஐ அடிப்படையாகக் கொண்ட 'Android 15' இல் இயங்குகிறது. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போன் Android அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்களைப் பெறும். பின்னர், இந்த போனில் In-display Fingerprint Sensor உள்ளது.
'Vivo V60 Lite 5G' IP68 & IP69 தூசி மற்றும் நீர் எதிர்ப்புடன் வெளியிடப்படும். பின்னர், இந்த ஸ்மார்ட்போன் 'USB Type-C' ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது.
Vivo V60 Lite 5G, போன் 6000mAh, பேட்டரியுடன் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், இந்த புதிய Vivo போன் வேகமாக சார்ஜ் செய்யும் வசதியுடன் வெளியிடப்படும். இதேபோல், இந்த புதிய விவோ போனில் 5G, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.4, NFC உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு உள்ளது.
இதேபோல், (Vivo V60 Lite 5G) விவோ வி60 லைட் 5ஜி போன் பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய VIVO போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.