அடுத்த Motorola 5ஜி போன் ரெடி.. Snapdragon 7s Gen 2 .. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்,Motorola G67 Power 5G Specifications,Motorola g86 Power 5G,
அடுத்த Motorola 5ஜி போன் ரெடி.. Snapdragon 7s Gen 2 .. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்
அதாவது, மோட்டோரோலா நிறுவனம் வரும் மாதங்களில் மோட்டோரோலா G67 பவர் 5G போனை அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிலையில், மோட்டோரோலா G87 பவர் 5G ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்த தகவல்களை இங்கே காணலாம்.
Motorola G67 Power 5G Specifications
மோட்டோரோலா ஜி67 பவர் 5ஜி அம்சங்கள் : இந்த மோட்டோரோலா G67 பவர் 5G ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த (Snapdragon 7s Gen 2 chipset) ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்படும். குறிப்பாக, இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் எந்த பிரச்சனையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
அதேபோல், இந்த போனில் Adreno 710 GPU கிராபிக்ஸ் கார்டும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறிப்பாக ஒரு சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும். பின்னர், இந்த மோட்டோரோலா G67 பவர் 5G போன் 8GB RAM மற்றும் 256GB வரை மெமரிகத்துடன் அறிமுகப்படுத்தப்படும். கூடுதலாக, இந்த மோட்டோரோலா போன் மெமரி விரிவாக்க ஆதரவையும் கொண்டுள்ளது. அதாவது, நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது.
மோட்டோரோலா ஜி67 பவர் 5ஜி, ஹலோ யுஐ அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 15 இல் இயங்குகிறது. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்களைப் பெறும். தற்போது, இந்த மோட்டோரோலா போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. இந்த போனின் அனைத்து அம்சங்களும் விரைவில் வெளியிடப்படும். மேலும், ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோரோலா ஜி86 பவர் 5ஜி போனின் அம்சங்களைப் பார்ப்போம்.
Motorola g86 Power 5G specifications
மோட்டோரோலா ஜி86 பவர் 5ஜி அம்சங்கள் : மோட்டோரோலா ஜி86 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10 பிட் கர்வ்ட் பிஓஎல்இடி (Curve pOLED) டிஸ்ப்ளேவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே 2712×1220 பிக்சல்கள், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7 பாதுகாப்பு (In-display Fingerprint Sensor) இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்ட பல அம்சங்களையும் கொண்டுள்ளது.
மோட்டோரோலா G86 பவர் 5G போனில் 50MP சோனி LYT-600 பிரதான கேமரா + 8MP அல்ட்ரா-வைட் கேமரா + மேக்ரோ என மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இந்த போனில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 32MP கேமரா உள்ளது.
மோட்டோரோலா G86 பவர் 5G ஸ்மார்ட்போன் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4NM சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போனில் மாலி-G615 MC2 GPU கிராபிக்ஸ் கார்டும் உள்ளது.
இந்த புதிய போனை PANTONE Cosmic Sky, Pantone Golden Cypress மற்றும் Pantone Spellbound வண்ணங்களில் வாங்கலாம். புதிய Motorola G86 Power 5G ஸ்மார்ட்போனில் USB Type-C ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆட்டம்ஸ் மற்றும் இரட்டை மைக்ரோஃபோன்கள் உள்ளிட்ட பல சிறந்த அம்சங்கள் உள்ளன.
COMMENTS