மார்க்கெட்டையே அதிரவைக்க Realme ரெடி! GT 8 Pro -ல் இத்தனை அம்சங்களா? 7000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்,Snapdragon 8 Elite Gen 5 சிப்செட், 120W சார்ஜிங்!
Realme GT 8 Pro: சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Realme GT 8 Pro ஸ்மார்ட்போன், இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. Realme GT 8 Pro ஸ்மார்ட்போன் நவம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த போன் Flipkart தளத்தில் விற்பனை செய்யப்படும்.
மேலும், இந்த புதிய Realme GT 8 Pro ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த போன் இந்தியாவில் குறிப்பாக நல்ல வரவேற்பைப் பெறும். இப்போது இந்த போனின் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம்.
Realme GT 8 Pro Specifications
ரியல்மி ஜிடி 8 ப்ரோ அம்சங்கள்: இந்த புதிய Realme GT 8 Pro ஸ்மார்ட்போன் 6.79-இன்ச் QHD+ AMOLED நெகிழ்வான டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே 144Hz வரை புதுப்பிப்பு வீதம், 2K தெளிவுத்திறன், 7000 nits உச்ச பிரகாசம், 1.07 பில்லியன் வண்ணங்கள், 3200Hz தொடு மாதிரி வீதம், 100 சதவீதம் DCI-P3 வண்ண வரம்பு மற்றும் 100 சதவீதம் sRGB ஆதரவு உள்ளிட்ட பல சிறந்த அம்சங்களையும் கொண்டுள்ளது.
இந்த அற்புதமான ரியல்மி GT8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலில் 50-மெகாபிக்சல் (f/1.8) ரிக்கோ GR ஆன்டி-கிளேர் பிரைமரி கேமரா + 50-மெகாபிக்சல் (f/2.0) அல்ட்ராவைடு கேமரா + 200-மெகாபிக்சல் (f/2.6) டெலிஃபோட்டோ கேமரா 120x டிஜிட்டல் ஜூம் திறன்களுடன் கூடிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது.
இது செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 32MP கேமராவையும் கொண்டுள்ளது. குறிப்பாக, இந்த போன் 30 fps இல் 8K வீடியோ பதிவை ஆதரிக்கிறது. எனவே, இந்த ஸ்மார்ட்போன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது 16GB வரை ரேம் மற்றும் 1TB வரை நினைவக ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. கேமிங் பயனர்களை ஈர்க்க இந்த அற்புதமான ரியல்மி GT8 ப்ரோ போனில் R1X கிராபிக்ஸ் சிப்பும் உள்ளது.
இந்த Realme GT8 Pro ஸ்மார்ட்போனில் 7000mAh பேட்டரி உள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120W மற்றும் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. குறிப்பாக நீங்கள் இந்த போனை வாங்கினால், சார்ஜ் செய்வது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதாவது, இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப்பை வழங்கும்.
ஆன்லைனில் வெளியிடப்பட்ட தகவலின்படி, Realme GT8 Pro ஸ்மார்ட்போன் ரூ. 50,000 பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த Realme GT8 Pro ஸ்மார்ட்போன் இந்திய சந்தையிலும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

.jpg)
COMMENTS