6GB ரேம் (6GB விர்ச்சுவல்) + 128GB மெமரி வேரியண்ட்டின் சந்தை விலை ரூ. 17,999. இப்போது, ரூ. 3,000 விலைக் குறைப்புக்குப் பிறகு பிளிப்கார்ட்டில் ரூ. 14,999 பட்ஜெட்டில் வாங்குவதற்குக் கிடைக்கிறது. கூடுதலாக, ரூ. 750 கிரெடிட் கார்டு தள்ளுபடி உள்ளது. எனவே, நீங்கள் இதை ரூ. 14,249 பட்ஜெட்டில் ஆர்டர் செய்யலாம்.
Lava Blaze X 5G Specifications
லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி அம்சங்கள்: இந்த லாவா ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) 3D வளைந்த AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே FullHD+ தெளிவுத்திறன், 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, (394 PPI pixel density) மற்றும் 16.7 மில்லியன் வண்ண ஆழம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. இது Android 14 OS உடன் Android 15 OS அப்டேட்வுடன் வருகிறது. இது 2 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு அப்டேட்களைக் கொண்டுள்ளது. இது ஒரு பட்ஜெட்டில் வரும் Mali G57 GPU கிராபிக்ஸ் அட்டையைக் கொண்டுள்ளது.
இந்த Lava Blaze X 5G ஸ்மார்ட்போன் Octa Core 6nm MediaTek Dimensity 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது SONY சென்சார் கொண்ட 64MP பிரதான கேமராவைக் கொண்டுள்ளது. இந்த கேமரா 2MP மேக்ரோ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.
இந்த இரட்டை பின்புற கேமராவில் Pro Video, Ultra HD, Dual View Video, Night Mode, Portrait Mode போன்ற அம்சங்கள் உள்ளன. இது 16MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. இது Beauty மற்றும் HDR அம்சங்களையும் கொண்டுள்ளது.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பகத்தைத் தவிர, 4 ஜிபி ரேம் (4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி சேமிப்பகமும் 8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி சேமிப்பகமும் கொண்ட வகைகளும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இந்த லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 33W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. டைப்-சி சார்ஜிங் போர்ட் கிடைக்கிறது.
இந்த பேட்டரி மெலிதான உடலுடன் வரவில்லை. இது 8.45 மிமீ தடிமன் கொண்டது. ஆனால், இதன் எடை 183 கிராம் மட்டுமே. இந்த லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இது டைட்டானியம் கிரே மற்றும் ஸ்டார்லைட் பர்பிள் நிறங்களில் கிடைக்கிறது.