அதாவது, லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரியுடன் வெளியிடப்படும் என்று முன்னர் கூறப்பட்டது. ஆனால் டிப்ஸ்டர் டெபயன் ராய் வெளியிட்ட தகவலின்படி, இந்த லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியுடன் வெளியிடப்படும்.
Lava Agni 4 Specifications
லாவா அக்னி 4 அம்சங்கள்: இந்த புதிய லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்படும். குறிப்பாக, இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை வழங்கும். இதேபோல், அனைத்து ஆப்களையும் இந்த போனில் எந்த இடையூறும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் முழு HD பிளஸ் டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே HDR ஆதரவு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
புதிய லாவா போன் மூன்று வகைகளில் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி. இந்த போன் நினைவக விரிவாக்க ஆதரவையும் கொண்டிருக்கும். அதாவது நீங்கள் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டைப் பயன்படுத்தி மெமரி கார்டைப் பயன்படுத்தலாம்.
லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் 50 எம்பி 50எம்பி டூயல் ரியர் கேமரா, அமைப்புடன் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனுடன் நீங்கள் அதிர்ச்சியூட்டும் படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கலாம். இந்த புதிய லாவா போன் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 32 எம்பி கேமராவுடன் வரும். இது தவிர, இந்த போனில் எல்இடி ஃபிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன.
இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 68W வேகமான சார்ஜிங் வசதி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த லாவா போன் (In-display Fingerprint Sensor) இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உடன் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த புதிய லாவா ஸ்மார்ட்போன் 5G, 4G, Wi-Fi, GPS, USB Type-C, NFC உள்ளிட்ட இணைப்பு ஆதரவுடன் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த புதிய லாவா போன் (Dust & Water Resistant) IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த புதிய லாவா போன் ரூ. 30000 க்கு கீழ் வெளியிடப்படும்.
குறிப்பாக இந்த லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் அனைத்து சிறந்த அம்சங்களுடனும் வெளியிடப்படுவதால், இது இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
