Realme GT 7 Pro தற்போது Flipkart மற்றும் Amazon India ஆகிய இரண்டு மின் வணிக தளங்களிலும் குறைந்த விலையில் வாங்குவதற்குக் கிடைக்கிறது. இது Flipkart இல் ரூ. 44,996 முதல் வாங்குவதற்குக் கிடைக்கிறது.
இது 12 GB RAM + 256 GB உள் ஸ்டோரேஜ் விருப்பத்தின் விலை. நினைவுகூர, அதன் அசல் வெளியீட்டு விலை ரூ. 59,999. எனவே, Realme GT 7 Pro ஸ்மார்ட்போன் Flipkart இல் ரூ. 15,000 நேரடி விலைக் குறைப்பில் விற்கப்படுகிறது.
இதேபோல், Amazon India நிறுவனம் Realme GT7 Pro ஸ்மார்ட்போனின் 12GB RAM + 256GB உள் சேமிப்பு விருப்பத்தை ரூ. 50,999க்கு விற்பனை செய்கிறது, இது ரூ. 9000.
ரியல்மி GT7 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120 ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட், (120Hz refresh rate support) ஆதரவு
- டால்பி விஷன் (Dolby Vision)
- எச்டிஆர் 10 பிளஸ் (HDR 10 Plus support) ஆதரவு
- 6.78 இன்ச் (Full HD Plus AMOLED display) ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளே
- Snapdragon 8 Elite chipset: ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்,
- 16GB வரை LPDDR5X ரேம்
- 512GB வரை UFS 4.0 உள் ஸ்டோரேஜ்
- டிரிபிள் பின்புற கேமரா அமைப்பு
- 50-மெகாபிக்சல் சோனி IMX906 ப்ரைமரி சென்சார்,
- 50-மெகாபிக்சல் சோனி IMX882 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 8-மெகாபிக்சல் சோனி IMX355 அல்ட்ரா-வைட் கேமரா
- 16-மெகாபிக்சல் செல்ஃபி சென்சார்
- 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5800mAh பேட்டரி
- இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP69 மதிப்பீடு
- பரிமாணங்கள் 162.45 x 76.89 x 8.55 மிமீ
- எடை சுமார் 222 கிராம்
ரியல்மி GT8 ப்ரோ இந்தியா வெளியீடு, விலை மற்றும் அம்சங்கள்: இது இந்தியாவில் நவம்பர் 20 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் ரூ. 60,000 பட்ஜெட்டில், அல்லது இன்னும் துல்லியமாகச் சொன்னால் ரூ. 59,990க்கு அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Realme GT8 Pro ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 1440 x 3136 பிக்சல்கள் தெளிவுத்திறன்
- 7000 nits பீக் ப்ரைட்னஸ்,
- 144 Hz ரெஃப்ரெஷ் ரேட் - 1.07 பில்லியன் வண்ணங்கள்
- 6.79-இன்ச் QHD+ AMOLED நெகிழ்வான காட்சி
- Qualcomm Snapdragon 8 Elite Gen 5
- 16GB வரை LPDDR5X RAM
- 1TB UFS 4.1 உள் ஸ்டோரேஜ் வரை
- டிரிபிள் பின்புற கேமரா அமைப்பு
- 50-மெகாபிக்சல் (f/1.8) 22mm குவிய நீளம், இரண்டு-அச்சு ஆப்டிகல் பட உறுதிப்படுத்தல் (OIS) ஆதரவுடன் கூடிய Ricoh GR ஆன்டி-க்ளேர் முதன்மை கேமரா
- 50 மெகாபிக்சல் (f/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 120x டிஜிட்டல் ஜூம் திறன்களுடன் கூடிய 200-மெகாபிக்சல் (f/2.6) டெலிஃபோட்டோ கேமரா
- 32-மெகாபிக்சல் (f/2.4) செல்ஃபி கேமரா
- 120W மற்றும் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 7000mAh பேட்டரி

