Resume தயாரிப்பது எப்படி? 5 நிமிடத்தில் மொபைலிலேயே ரெடி பண்ணலாம்! (Free App)

வேலைக்கு Resume ரெடி பண்ண கம்ப்யூட்டர் சென்டர் போக வேண்டாம். உங்கள் மொபைலிலேயே 5 நிமிடத்தில் Professional CV தயாரிப்பது எப்படி? சிறந்த இலவச ஆப் எது?

How to make professional resume and CV on android mobile phone within 5 minutes Tamil guide, Resume தயாரிப்பது எப்படி? 5 நிமிடத்தில் மொபைலிலேயே ரெடி பண்ணலாம்! (Free App)

Resume தயாரிப்பது எப்படி? 5 நிமிடத்தில் மொபைலிலேயே ரெடி பண்ணலாம்! (Free App): வேலைக்கு அப்ளை பண்ணனும்னா முதல்ல என்ன கேட்பாங்க? "உங்க Resume அனுப்புங்க"னுதான் கேட்பாங்க.

Resume தயாரிப்பது எப்படி? 5 நிமிடத்தில் மொபைலிலேயே ரெடி பண்ணலாம்! (Free App)

உடனே நம்ம பசங்க என்ன பண்ணுவாங்க? கம்ப்யூட்டர் சென்டருக்கு போய், 50 ரூபா, 100 ரூபா கொடுத்து, பழைய ஃபார்மேட்ல ஒரு Resume ரெடி பண்ணுவாங்க. இனி அந்த செலவு தேவையில்லை!

உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனை வைத்தே, கார்ப்பரேட் நிறுவனங்கள் வியந்து பார்க்கும் அளவுக்கு ஒரு Professional Resume-ஐ 5 நிமிடத்தில் இலவசமாகத் தயாரிக்கலாம்.

எப்படி என்று பார்ப்போம்.

எந்த ஆப் சிறந்தது? (Best App)

ப்ளே ஸ்டோரில் நூற்றுக்கணக்கான ஆப்ஸ் இருந்தாலும், மிக எளிமையான மற்றும் தரமான ஆப் என்றால் அது "Intelligent CV - Resume Builder" தான்.

எப்படி தயாரிப்பது? (Step-by-Step)

படி 1: டவுன்லோட் செய்யவும் முதலில் Google Play Store சென்று "Resume Builder App" அல்லது "Intelligent CV" எனத் தேடி இன்ஸ்டால் செய்யவும்.

படி 2: விபரங்களைப் பதிவு செய்யவும் ஆப்பை ஓபன் செய்ததும் "Create" என்ற பட்டன் இருக்கும். அதை அழுத்தினால் பல பிரிவுகள் வரும்:

  • Personal Details: உங்கள் பெயர், முகவரி, போன் நம்பர், ஈமெயில்.
  • Education: படித்த படிப்பு, கல்லூரி, மதிப்பெண்.
  • Experience: வேலை முன் அனுபவம் இருந்தால் அதைப் போடலாம் (Fresher என்றால் இதை விட்டுவிடலாம்).
  • Skills: உங்களுக்குத் தெரிந்த திறமைகள் (Ex: Java, Python, MS Office, Video Editing).

படி 3: டெம்ப்ளேட் தேர்வு (Choose Template) எல்லா விபரங்களையும் கொடுத்த பிறகு, "View CV" என்பதைக் கொடுத்தால், சுமார் 50-க்கும் மேற்பட்ட டிசைன்கள் வரும்.

  • இதில் உங்களுக்குப் பிடித்த டிசைனை தேர்வு செய்யுங்கள்.
  • நிறம் (Color), எழுத்து வடிவம் (Font) என அனைத்தையும் மாற்றிக்கொள்ளலாம்.

படி 4: சேவ் செய்யவும் (Download PDF) டிசைன் ஓகே ஆனதும், "Download" அல்லது "Print" என்பதைக் கொடுத்தால், உங்கள் Resume அழகான PDF ஃபைலாக உங்கள் போனில் சேவ் ஆகிவிடும்.

அவ்வளவுதான்! இதை அப்படியே வாட்ஸ்அப் அல்லது ஈமெயிலில் கம்பெனிக்கு அனுப்பிவிடலாம்.

ஒரு நல்ல Resume எப்படி இருக்க வேண்டும்? (Pro Tips)

  1. படம் அவசியம்: உங்கள் முகம் தெளிவாகத் தெரியும் படியான ஒரு போட்டோவை சேர்ப்பது நல்லது. (செல்ஃபி வேண்டாம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ சிறந்தது).
  2. பிழை இருக்கக்கூடாது: ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
  3. சுருக்கமாக இருக்கட்டும்: 2 பக்கத்திற்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

இனி வேலை தேட Resume ரெடி பண்ண அலைஞ்சு திரிய வேண்டாம். உங்க போனிலேயே கெத்தா ரெடி பண்ணுங்க!

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக