WhatsApp-ல் Delete செய்த மெசேஜை படிப்பது எப்படி? (No App Required!)
இதைப் பார்த்தாலே நமக்கு ஒரு டென்ஷன் வரும். "அப்படி என்னதான் அனுப்பியிருப்பார்கள்?" என்ற ஆர்வம் தொற்றிக்கொள்ளும்.
கவலை வேண்டாம்! ஆண்ட்ராய்டு போனில் எந்த ஒரு Third-party App (வெளிப்புற செயலி) உதவியும் இல்லாமலேயே, டெலீட் செய்த மெசேஜை படிக்கும் ஒரு ரகசிய வசதி உள்ளது.
அது எப்படி? இதோ எளிய வழிமுறைகள்.
இதையும் படியுங்கள்: Train எங்கே வருகிறது? இனி ஆப் தேவையில்லை! WhatsApp-ல் பார்க்கும் எளிய வழி!
ஸ்டெப் 1: நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி (Android Notification History) - இதுதான் பாதுகாப்பானது!
உங்கள் போன் Android 11 அல்லது அதற்கு மேல் உள்ள வெர்ஷனில் இயங்குகிறது என்றால், நீங்கள் அதிர்ஷ்டசாலி. இந்த வசதி உங்கள் போனிலேயே உள்ளது.
- உங்கள் மொபைல் Settings (செட்டிங்ஸ்) செல்லவும்.
- அதில் Notifications என்பதை கிளிக் செய்யவும்.
- பிறகு Advanced Settings அல்லது Notification History என்ற ஆப்ஷனைத் தேடிக் கண்டுபிடிக்கவும். (கிடைக்கவில்லை என்றால், செட்டிங்ஸ் சர்ச் பாரில் 'Notification History' என டைப் செய்யவும்).
- உள்ளே சென்று அந்த ஆப்ஷனை ON (ஆன்) செய்து வைக்கவும்.
எப்படி வேலை செய்யும்? இதை ஆன் செய்த பிறகு, யாராவது உங்களுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு உடனே டெலீட் செய்தாலும் கவலை இல்லை.
- நேராக இதே Notification History பக்கத்திற்கு வாருங்கள்.
- அங்கே வாட்ஸ்அப் ஐகானுக்குக் கீழே, அவர் அனுப்பிய (டெலீட் செய்த) அந்த மெசேஜ் அப்படியே இருக்கும்!
- பெயர், நேரம் மற்றும் மெசேஜ் என அனைத்தையும் தெளிவாகப் படிக்கலாம்.
ஸ்டெப் 2: பழைய ஆண்ட்ராய்டு போன்களுக்கு (Apps மூலம்)
உங்கள் போனில் மேலே சொன்ன வசதி இல்லையென்றால், நீங்கள் வேறு வழியின்றி ஆப்ஸைத்தான் நாட வேண்டும்.
- WAMR அல்லது Notisave போன்ற ஆப்கள் பிளே ஸ்டோரில் உள்ளன.
- இவை உங்கள் நோட்டிபிகேஷனைச் சேமித்து வைக்கும். யாராவது மெசேஜை டெலீட் செய்தால், இந்த ஆப்பிற்குள் சென்று படித்துக்கொள்ளலாம்.
எச்சரிக்கை (Warning): இந்த ஆப்கள் உங்கள் நோட்டிபிகேஷன் முழுவதையும் படிக்கும் அனுமதி (Permission) கேட்கும். வங்கி சார்ந்த OTP, தனிப்பட்ட மெசேஜ்களையும் இவை படிக்க வாய்ப்புள்ளது. எனவே, முறை 1 (Notification History) பயன்படுத்துவதே மிகவும் பாதுகாப்பானது.
முடிவு:
இனிமேல் "This message was deleted" என்று வந்தால் பதறாதீர்கள். உடனே செட்டிங்ஸ் போய் ஹிஸ்டரியை செக் பண்ணுங்கள். மேட்டர் ஓவர்!
இந்த ட்ரிக்ஸ் உங்களுக்குப் பிடித்திருந்தால், மறக்காமல் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
.jpg)
.jpg)
.jpg)