உங்கள் பெயரிலேயே Caller Tune வைப்பது எப்படி? (Jio & Airtel Free Method)

சினிமா பாட்டு போரடிக்குதா? உங்கள் பெயரிலேயே (Name Caller Tune) இலவசமாக காலர் டியூன் வைப்பது எப்படி? Jio மற்றும் Airtel பயனர்களுக்கான எளிய வழிமுறை இதோ.

How to set name caller tune in Jio and Airtel for free Tamil guide, உங்கள் பெயரிலேயே Caller Tune வைப்பது எப்படி? (Jio & Airtel Free Method)

உங்கள் பெயரிலேயே Caller Tune வைப்பது எப்படி? (Jio & Airtel Free Method): வழக்கமாக போன் பண்ணா என்ன கேட்கும்? "நான் ரெடி... தான் வரவா..." அல்லது "ஹூக்கும்... டைகர் கா ஹூக்கும்..." என்று ஏதாவது சினிமா பாட்டு கேட்கும். இதெல்லாம் இப்போ போர் அடிச்சு போச்சு.!

உங்கள் பெயரிலேயே Caller Tune வைப்பது எப்படி? (Jio & Airtel Free Method)

உங்களுக்கு யாராவது போன் பண்ணும்போது, "வணக்கம், கார்த்திக் உங்களை அழைக்கிறார்... தயவுசெய்து காத்திருக்கவும்" என்று உங்கள் பெயரிலேயே ஒலித்தால் எப்படி இருக்கும்?

கேட்கவே கெத்தா இருக்குல? இதை உங்கள் ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) நம்பரில் முற்றிலும் இலவசமாக செட் செய்யலாம். அதுவும் தமிழ், ஆங்கிலம் என உங்களுக்குப் பிடித்த மொழியில்!

எப்படி என்று பார்ப்போமா?

How to set name caller tune in Jio and Airtel for free Tamil guide

1. ஜியோ பயனர்களுக்கு (Jio Users) - MyJio App

ஜியோ சிம் வைத்திருப்பவர்கள் இதை மிகவும் ஈஸியாக செய்யலாம்.

  1. உங்கள் மொபைலில் MyJio App-ஐ ஓபன் செய்யவும்.
  2. கீழே உள்ள மெனுவில் "JioTunes" என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். (அல்லது Music பகுதிக்குச் செல்லவும்).
  3. அங்கே "Name JioTunes" என்று ஒரு தனி பட்டன் இருக்கும். அதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. இப்போது Search Name என்ற இடத்தில் உங்கள் பெயரை டைப் செய்யவும். (உதா: Raja).
  5. உடனே உங்கள் பெயரில் பல குரல்களில், பல மொழிகளில் (Tamil, English) டியூன்கள் வரும்.
  6. பக்கத்தில் உள்ள Play ▶️ பட்டனை அழுத்தி கேட்டுப் பாருங்கள். பிடித்திருந்தால் Set கொடுங்கள்.
  7. அவ்வளவுதான்! இனி யார் கூப்பிட்டாலும் உங்கள் பெயர் ஒலிக்கும்!

2. ஏர்டெல் பயனர்களுக்கு (Airtel Users) - Wynk Music

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் Wynk Music ஆப் மூலம் இதை இலவசமாக வைக்கலாம்.

  1. Wynk Music ஆப்பை ஓபன் செய்யவும்.
  2. கீழே அல்லது மேலே உள்ள "Hello Tunes" ஐகானை கிளிக் செய்யவும்.
  3. அங்கே "Name Hello Tunes" அல்லது "Pro-Name Tunes" என்று இருக்கும். (சில நேரங்களில் தேடல் பெட்டியில் உங்கள் பெயரைத் தேடினாலும் வரும்).
  4. உங்கள் பெயரை டைப் செய்து தேடவும்.
  5. உங்களுக்குப் பிடித்த மொழியில் (தமிழ் அல்லது ஆங்கிலம்) வரும் டியூனைத் தேர்ந்தெடுத்து "Set Hello Tune" கொடுக்கவும்.
  6. இது 30 நாட்களுக்கு இலவசம். அதன் பிறகு மீண்டும் ஒருமுறை வந்து புதுப்பிக்க (Renew) வேண்டும்.

முக்கிய குறிப்பு (Bonus Tip):

  • உங்கள் பெயர் மிகவும் அரிதான பெயராக (Unique Name) இருந்தால், லிஸ்டில் வராமல் போக வாய்ப்புள்ளது.
  • அதுபோன்ற சமயத்தில், "Artist JioTunes" பகுதியில் உங்களுக்குப் பிடித்த நடிகர் (விஜய், அஜித், சூர்யா) குரலில் பேசும் டியூன்களை வைக்கலாம்!

இதை இப்போதே ட்ரை பண்ணுங்க. உங்க பிரண்ட்ஸ் போன் பண்ணிட்டு "என்ன மச்சான்... பெரிய ஆளாயிட்ட?"னு கேட்பாங்க! 😉

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக