வாயைத் திறந்தா போதும்! Google Photos-ல் வந்த புது AI மேஜிக்!

Google Photos-ல் புதிய Gemini AI வசதி! இனி தமிழில் கட்டளை கொடுத்து போட்டோக்களை எடிட் செய்யலாம். பயன்படுத்துவது எப்படி? வாயைத் திறந்தா போதும்!

வாயைத் திறந்தா போதும்! Google Photos-ல் வந்த புது AI மேஜிக்!, Google Photos help me edit feature with Gemini AI interface

Google Photos Adds Gemini AI Voice Editing Support for Tamil and Other Indian Languages:
 "வாயைத் திறந்தா போதும்! Google Photos-ல் வந்த புது AI மேஜிக்!" புகைப்படங்களை எடிட் செய்வது என்பது பலருக்கு ஒரு சவாலான விஷயம். "Brightness ஏற்றுவது எங்கே?", "Background-ஐ எப்படி நீக்குவது?" என்று ஒவ்வொரு ஆப்ஷனாகத் தேட வேண்டும். ஆனால், கூகுள் நிறுவனம் இப்போது அந்த கவலையை முற்றிலுமாகப் போக்கியுள்ளது.

வாயைத் திறந்தா போதும்! Google Photos-ல் வந்த புது AI மேஜிக்!

தனது அதிநவீன செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான Gemini AI-ஐ இப்போது கூகுள் போட்டோஸ் செயலியில் இணைத்துள்ளது. இதன் மூலம், நாம் சாதாரணமாக ஒருவரிடம் பேசுவது போலவே, ஆப்பிடம் பேசி போட்டோக்களை எடிட் செய்ய முடியும்.

தமிழில் பேசலாம்! (Regional Language Support)

இந்த வசதியின் சிறப்பம்சமே இதன் மொழி ஆதரவுதான். ஆங்கிலம் மட்டுமின்றி, தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, பெங்காலி மற்றும் குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளிலும் இது செயல்படும்.

  • உதாரணத்திற்கு, ஒரு போட்டோவை ஓபன் செய்து, "பின்னணியை நீக்கு" (Remove Background) என்று தமிழில் சொன்னாலே, AI அதைப் புரிந்து கொண்டு பின்னணியை நீக்கிவிடும்.
பேசி போட்டோ எடிட் பண்றது இருக்கட்டும்.. சும்மா டைப் பண்ணாலே போட்டோ வீடியோவா மாறுமே, அது தெரியுமா? 👉 போட்டோ பேசுமா? Google Photos-ல் வந்த புது AI மேஜிக்! ✨

பயன்படுத்துவது எப்படி? (How to Use)

இந்த வசதி தற்போது இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வரத் தொடங்கியுள்ளது.

  1. Google Photos செயலியைத் திறக்கவும்.
  2. எடிட் செய்ய வேண்டிய போட்டோவை தேர்வு செய்யவும்.
  3. கீழே "Help me edit" என்ற பட்டன் புதிதாகத் தெரியும். அதை கிளிக் செய்யவும்.
  4. இப்போது மைக் ஐகானை அழுத்தி, "வானத்தின் நிறத்தை மாற்று" அல்லது "வெளிச்சத்தை அதிகரி" என்று கட்டளையிடலாம். அல்லது டைப் செய்தும் சொல்லலாம்.

Google Photos help me edit feature with Gemini AI interface

யாருக்கெல்லாம் கிடைக்கும்? (Requirements)

இந்த வசதியைப் பயன்படுத்த உங்கள் போனில் சில தகுதிகள் இருக்க வேண்டும்:

  • உங்கள் போன் Android 8.0 அல்லது அதற்கு மேற்பட்ட வெர்ஷனில் இயங்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் 4GB RAM இருக்க வேண்டும்.
  • பயனருக்கு 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.

என்னென்ன செய்யலாம்?

  • Conversational Editing: நண்பரிடம் உதவி கேட்பது போல இயல்பாகப் பேசி எடிட் செய்யலாம்.
  • Object Removal: போட்டோவில் இருக்கும் வேண்டாத பொருட்களை அல்லது நபர்களை, "அந்த நாற்காலியை நீக்கு" என்று சொல்லி நீக்கலாம்.
  • Complex Edits: ஒரே கட்டளையில் பல மாற்றங்களைச் (Multi-style edits) செய்ய முடியும்.

இதையும் படியுங்கள்: போனிலேயே Privacy Screen! சாம்சங் S26 அல்ட்ரா லீக்ஸ்!

Tech Voice Verdict

நம் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு (Parents/Elders) இது மிகப்பெரிய வரப்பிரசாதம். அவர்களுக்கு எடிட்டிங் டூல்ஸ் பற்றித் தெரியாது, ஆனால் பேசத் தெரியும்!

இனி அவர்கள், "தம்பி, இந்த போட்டோல கொஞ்சம் வெளிச்சம் வைப்பா" என்று உங்களிடம் கேட்கத் தேவையில்லை. அவர்களே கூகுளிடம் சொல்லி செய்து கொள்ளலாம். தமிழ் மொழி ஆதரவு இருப்பது இதன் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம்.

Source / நன்றி: Asianet News Tamil

கருத்துரையிடுக