Snapdragon 8 Elite Gen 6 Pro லீக்ஸ்! ஆப்பிள் M சிப்செட்டுக்கு சவாலா?

Qualcomm Snapdragon 8 Elite Gen 6 Pro சிப்செட் விபரங்கள் லீக்! 5GHz கிளாக் ஸ்பீட் மற்றும் 2nm தொழில்நுட்பம். மொபைல் வேகம் இனி கம்ப்யூட்டருக்கு நிகர்!
Sabari

Snapdragon 8 Elite Gen 6 Pro லீக்ஸ்! ஆப்பிள் M சிப்செட்டுக்கு சவாலா? | Snapdragon 8 Elite Gen 6 Pro Leaks: 5GHz வேகம்! மொபைல் உலகின் அரக்கன். | Snapdragon 8 Elite Gen 6 Pro chipset architecture concept

Qualcomm Snapdragon 8 Elite Gen 6 Pro Rumored to Cross 5GHz Clock Speed: ஸ்மார்ட்போன் ப்ராசஸர்களின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால் இப்போது வந்திருக்கும் செய்தி, மொபைல் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குவால்காம் (Qualcomm) நிறுவனம் தனது அடுத்த தலைமுறை சிப்செட்டான Snapdragon 8 Elite Gen 6 Pro-வில், கணினிகளுக்கு நிகரான வேகத்தை அறிமுகப்படுத்த உள்ளதாம்!

Qualcomm’s upcoming Snapdragon 8 Elite Gen 6 Pro

இதுவரை எந்த மொபைல் சிப்செட்டும் தொடாத 5GHz வேகத்தை இது கடக்க உள்ளதாக லீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அசுர வேகம் (Insane Clock Speeds)

சீனாவின் Weibo தளத்தில் வெளியான தகவலின்படி, குவால்காம் இரண்டு விதமான சிப்செட்களைத் தயாரிக்கிறது.

  • Standard Version: வழக்கமான Snapdragon 8 Elite Gen 6.
  • Pro Version: இதுதான் அந்த மான்ஸ்டர்! இதன் வேகம் 5GHz-ஐத் தாண்டும் என்று கூறப்படுகிறது.
  • சில சோதனைகளில் (Testing), இது 5.5GHz முதல் 6.0GHz வரை கூட எட்டியதாகச் சொல்லப்படுகிறது. இது உண்மையானால், உங்கள் கையில் இருக்கும் போன் ஒரு மினி சூப்பர் கம்ப்யூட்டராக மாறிவிடும்.!

மொபைல் சூடாகாதா? (Thermal Management)

இவ்வளவு வேகம் என்றால் போன் தீப்பிடிக்காதா? என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். அதற்கும் ஒரு தீர்வு வைத்துள்ளனர்.

  • சாம்சங் பயன்படுத்தும் HPB (Heat Pass Block) தொழில்நுட்பத்தை குவால்காம் பயன்படுத்த வாய்ப்புள்ளது.
  • இது சிப்செட்டிலேயே ஒரு Heatsink-ஐ இணைத்து, வெப்பத்தை மிக வேகமாக வெளியேற்றும். இதனால் போன் சூடாவதைத் தடுக்க முடியும்.
வேகமான ப்ராசஸர் மட்டும் போதாது.. கூடவே பெரிய பேட்டரியும் வேணும்ல? 10,001mAh பேட்டரி கொண்ட ரியல்மி போனை பார்த்தீங்களா? 👉 10,000mAh பேட்டரி vs 7000mAh பேட்டரி! Realme மற்றும் Redmi-யின் பலப்பரீட்சை!

Snapdragon 8 Elite Gen 6 Pro Leaks: 5GHz வேகம்! மொபைல் உலகின் அரக்கன். | Snapdragon 8 Elite Gen 6 Pro chipset architecture concept

2nm தொழில்நுட்பம் (Next Gen Tech)

இந்த சிப்செட் TSMC-யின் அதிநவீன 2nm (N2P) பிராசஸ் மூலம் உருவாக்கப்படலாம்.

  • சிப்செட் அளவு குறைய குறைய, அதன் செயல்திறன் கூடும்; பேட்டரி பயன்பாடு குறையும்.
  • இதனால் 5GHz வேகத்தில் இயங்கினாலும், பேட்டரி சீக்கிரம் தீராது என்று எதிர்பார்க்கலாம்.

தற்போதைய நிலை என்ன?

தற்போதுள்ள Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் அதிகபட்சமாக 4.61GHz வேகத்தில் இயங்குகிறது. ஆனால் Gen 6 Pro, 5GHz மைல்கல்லைத் தொடுவது தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.

இதையும் படியுங்கள்: Samsung Galaxy A57 முழு விபரங்கள் லீக்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளே!

Tech Voice Verdict

இது சாதாரண பயனர்களுக்கானது அல்ல. நீங்கள் போனில் "Video Editing" அல்லது "High-End Gaming" செய்பவர் என்றால், இந்த சிப்செட் உங்களுக்கான சொர்க்கம்.

ஆனால், இது விற்பனைக்கு வரும்போது போன்களின் விலையும் ரூ.1 லட்சத்தை தாண்டும் என்பதில் சந்தேகமில்லை. சாதாரண பயன்பாட்டிற்கு இப்போதைக்கு Gen 5 அல்லது Gen 4 சிப்செட்டே தாராளம்!

Source / நன்றி: 1.Gizbot, 2.gizmochina

கருத்துரையிடுக