Redmi Note 15 Pro vs Realme P4: பணம் வீணாகாமல் இருக்க இதை படியுங்கள்!

Realme P4 Power (10,000mAh) vs Redmi Note 15 Pro (200MP) முழு ஒப்பீடு! கேமரா, பேட்டரி, டிஸ்பிளே - ரூ.25,000 பட்ஜெட்டில் எதை வாங்குவது சிறந்தது?

Redmi Note 15 Pro vs Realme P4: பணம் வீணாகாமல் இருக்க இதை படியுங்கள்! | Realme P4 Power vs Redmi Note 15 Pro comparison

Realme P4 Power vs Redmi Note 15 Pro Comparison:
ஒரே நாளில் (ஜனவரி 29) இந்திய மொபைல் சந்தையில் இரண்டு ஜாம்பவான்கள் மோதுகின்றன. ஒன்று "Battery Monster" என்று அழைக்கப்படும் Realme P4 Power. மற்றொன்று "Camera King" என்று அழைக்கப்படும் Redmi Note 15 Pro.

Realme P4 Power vs Redmi Note 15 Pro Comparison

உங்கள் தேவைக்கு ஏற்ற போன் எது? விரிவாகப் பார்ப்போம்.

பேட்டரி யுத்தம் (Battery Battle)

இங்கே வெற்றி யாருக்கு என்று சந்தேகமே வேண்டாம்.

  • Realme P4 Power: இதில் இருப்பது 10,001mAh மெகா பேட்டரி. தொடர்ந்து 32 மணிநேரம் வீடியோ பார்க்கலாம்! மேலும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது.
  • Redmi Note 15 Pro: இதில் 6,580mAh (அல்லது 7000mAh) பேட்டரி உள்ளது. சார்ஜிங் வேகம் 45W மட்டுமே.
  • எதை வாங்கலாம்: நீங்கள் அதிகம் பயணம் செய்பவர் என்றால், கண்ணை மூடிக்கொண்டு Realme பக்கம் செல்லுங்கள்.

கேமரா மோதல் (Camera Clash)

போட்டோ எடுப்பதுதான் உங்கள் ஹாபி என்றால், முடிவு மாறிவிடும்.

  • Redmi Note 15 Pro: இதில் 200MP (OIS) முதன்மை கேமரா உள்ளது. ஜூம் செய்தாலும் பிக்சல் உடையாது.
  • Realme P4 Power: இதில் 50MP (OIS) கேமரா தான் உள்ளது. இதுவும் மோசம் இல்லை, ஆனால் 200MP அளவுக்கு இருக்காது.
  • எதை வாங்கலாம்: இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், போட்டோகிராபி பிரியர்களுக்கு Redmi தான் பெஸ்ட்.
ரெட்மி நோட் 15 ப்ரோ விலை லீக் ஆகிடுச்சுனு தெரியுமா? இலவச வாட்ச் ஆஃபர் பத்தி படிச்சீங்களா? 👉 Redmi Note 15 Pro விலை லீக்! அடேங்கப்பா.. இவ்வளவு ரேட்டா?

Realme P4 Power vs Redmi Note 15 Pro comparison

டிஸ்பிளே மற்றும் டிசைன் (Display & Design)

  • Display:
    • Realme: 1.5K OLED டிஸ்பிளேவுடன் 144Hz ரெஃப்ரெஷ் ரேட். (கேமிங்கிற்கு சூப்பர்).
    • Redmi: 1.5K AMOLED டிஸ்பிளேவுடன் 120Hz.
  • Durability:
    • Redmi: தண்ணீர் மற்றும் தூசியைத் தாங்க IP69 ரேட்டிங் உள்ளது. (தண்ணீரில் கழுவலாம்!).
    • Realme: எடை கொஞ்சம் அதிகம் (219 கிராம்).

பெர்ஃபார்மன்ஸ் (Performance)

இரண்டிலுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சிப்செட் தான் உள்ளது.

  • Processor: இரண்டுமே MediaTek Dimensity 7400 சீரிஸ் சிப்செட்டில் இயங்குகின்றன. ஆனால் கேமிங்கிற்கு Realme-யின் 144Hz திரை கூடுதல் பலம் சேர்க்கும்.

இதையும் படியுங்கள்: உலகிலேயே முதல் முறை! Dimensity 9500s சிப்செட் + 9000mAh பேட்டரி! ரெட்மியின் மாஸ் சம்பவம்!

எதை வாங்கலாம்?

1. Realme P4 Power: சார்ஜரைத் தேடாமல் 2-3 நாட்கள் போன் பயன்படுத்த வேண்டும், கேம் விளையாட வேண்டும் என்றால் இதுதான் உங்களுக்கானது.

2. Redmi Note 15 Pro: எனக்கு போட்டோஸ் முக்கியம், போன் பாக்க ஸ்லிம்மா இருக்கணும், தண்ணில விழுந்தாலும் ஒன்னும் ஆகக்கூடாது என்றால் ரெட்மியைத் தேர்வு செய்யுங்கள்.

கருத்துரையிடுக