இனி ஆதார் ஜெராக்ஸ் தேவையில்லை! மத்திய அரசின் புதிய ஆப் அறிமுகம்!

புதிய ஆதார் ஆப் அறிமுகம்! 18+ வயது சரிபார்ப்பு, மொபைல் நம்பர் மாற்றம் மற்றும் குடும்பத்தினரின் ஆதாரை இணைக்கும் வசதி. முழு விபரம்.,இனி ஆதார் ஜெராக்ஸ்

இனி ஆதார் ஜெராக்ஸ் தேவையில்லை! மத்திய அரசின் புதிய ஆப் அறிமுகம்!, New Aadhaar App features and age verification illustration

New UIDAI Aadhaar App Launched: Verify Age Without Sharing Data, Update Mobile Number Online: இனி ஆதார் ஜெராக்ஸ் தேவையில்லை! நாம் எங்கு சென்றாலும்—ஹோட்டல், தியேட்டர் அல்லது சிம் கார்டு வாங்க—ஆதார் அட்டையின் ஜெராக்ஸ் கேட்பார்கள். ஆனால், இப்படி கண்ட இடத்தில் ஆதார் நகலைக் கொடுப்பது பாதுகாப்பற்றது.

இதைத் தடுப்பதற்காகவே, UIDAI (Unique Identification Authority of India) நிறுவனம் ஒரு புதிய, பாதுகாப்பான "Aadhaar App"-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் என்ன? பார்ப்போம்.

இனி "வயது" மட்டும் தெரியும்! (Age Gating)

  • இந்த ஆப்பின் மிகப்பெரிய வசதி "Age Verification".
  • உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு தியேட்டருக்கு செல்கிறீர்கள் அல்லது ஆன்லைனில் கேம் விளையாடுகிறீர்கள் என்றால், நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவரா என்று நிரூபிக்க வேண்டும்.
  • அதற்கு முழு ஆதார் அட்டையையும் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
  • இந்த ஆப் மூலம் "Yes/No" என்று மட்டும் காட்டும் (வயது 18+ ஆம்/இல்லை). உங்கள் பிறந்த தேதி, விலாசம் போன்ற தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படாது.
ஆதார் மட்டும் இல்லை, உங்க போன் தொலைஞ்சு போனாலும் கண்டுபிடிக்கலாம்! மத்திய அரசின் CEIR இணையதளம் பற்றி தெரியுமா? 👉 போன் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! CEIR இணையதளம் மூலம் கண்டுபிடிப்பது எப்படி?

New Aadhaar App features and age verification illustration

மொபைல் நம்பர் அப்டேட் ஈசி! (Mobile Number Update)

"New Aadhaar App" இதுவரை மொபைல் நம்பரை மாற்ற ஆதார் மையத்திற்கு நேரில் செல்ல வேண்டும்.

  • ஆனால், புதிய ஆப் மூலமாக மொபைல் நம்பர் அப்டேட் செய்யும் வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது.
  • இது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்பத்தினரை இணைக்கலாம் (Add Family Profiles)

  • உங்கள் ஆதார் மட்டுமல்ல, உங்கள் குழந்தைகள், பெற்றோர் என மொத்தம் 5 பேரின் ஆதார் விவரங்களை ஒரே ஆப்பில் வைத்துக்கொள்ளலாம்.
  • விமான நிலையம் (Airport) அல்லது ரயில் நிலையங்களில் பயணம் செய்யும்போது, ஒவ்வொருவரின் அட்டையையும் தேட வேண்டியதில்லை.

New Aadhaar App features and age verification illustration

டிஜிட்டல் "Contact Card"

  • விசிட்டிங் கார்டு (Visiting Card) போல, உங்கள் விபரங்களை டிஜிட்டல் முறையில் பகிர Contact Card வசதி உள்ளது. காகித பயன்பாட்டை இது குறைக்கும்.

ஆதார் ஜெராக்ஸ் இனி வேண்டாம்!

  • ஹோட்டல்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் இனி காகித நகலைக் (Xerox) கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று UIDAI கேட்டுக்கொண்டுள்ளது. அதற்குப் பதில் இந்த ஆப் மூலம் QR Code ஸ்கேன் செய்து விவரங்களைப் பகிரலாம்.

இதையும் படியுங்கள்: புது போன் வாங்கப் போறீங்களா? பிப்ரவரி 2026 லிஸ்ட் இதோ!

Tech Voice Verdict

இது ஒரு மிகச்சிறந்த முன்னெடுப்பு. DPDP Act (தரவுப் பாதுகாப்புச் சட்டம்) கீழ் இது வருவதால், உங்கள் தகவல்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

குறிப்பாக, மொபைல் நம்பர் மாற்றம் மற்றும் வயதுச் சான்று (Age Proof) ஆகியவற்றுக்கு இது மிகவும் பயன்படும். உடனே உங்கள் போனில் இன்ஸ்டால் செய்து வைத்துக்கொள்வது நல்லது! ✅📲

Source / நன்றி: The Hindu 

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக