Vivo V70 Series லீக்! டிசைன் சும்மா கிளாஸ்! விலை மற்றும் சிறப்பம்சங்கள்

Vivo V70 மற்றும் V70 Elite விலை மற்றும் சிறப்பம்சங்கள் லீக்! 6500mAh பேட்டரி, Snapdragon 8s Gen 3 சிப்செட் உடன் வரும் மிரட்டலான போன். முழு விபரம் உள்ள
Sabari

Vivo V70 Series லீக்! டிசைன் சும்மா கிளாஸ்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் | Vivo V70 Series Leaks Tamil: 6500mAh பேட்டரி, 50MP ZEISS கேமரா! முழு விபரம். | Vivo V70 Elite passion red color back panel design

Vivo V70 Series லீக்! 

Vivo V70 Series Design & Specs Leaked:விவோ V சீரிஸ் என்றாலே "ஸ்டைலிஷ் டிசைன்" மற்றும் "செல்ஃபி கேமரா" தான் நினைவுக்கு வரும். ஆனால் இம்முறை விவோ தனது பாணியை மாற்றி, Performance மற்றும் Battery-யிலும் கவனம் செலுத்தியுள்ளது. பிப்ரவரி மாதம் இந்தியாவில் வெளியாகவுள்ள Vivo V70 மற்றும் Vivo V70 Elite பற்றிய முழு விபரங்கள் இதோ.

டிசைன் மற்றும் டிஸ்பிளே (Glass-Metal Magic)

  • Design: முந்தைய மாடல்களை விட ப்ரீமியமாக, Glass-Metal பாடியில் இது வருகிறது. பெசல்கள் (Bezels) மிகக் குறைவாக இருப்பதால் திரை முழுமையாகத் தெரியும்.
  • Colors:
    • V70: Passion Red (சிவப்பு), Lemon Yellow (மஞ்சள்).
    • V70 Elite: Passion Red, Sand Beige, Black.
  • Display: இரண்டு மாடல்களிலும் 6.59-inch FHD+ AMOLED திரை மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.
விவோவில் 6500mAh பேட்டரி சூப்பர் தான்.. ஆனா அதைவிட பெரிய 7300mAh பேட்டரி கொண்ட Oppo போனை பார்த்தீங்களா? 👉 அடேங்கப்பா! 7300mAh பேட்டரியா? சார்ஜ் தீரவே தீராது போலயே! Oppo-வின் புது மாடல்!

Vivo V70 Series Leaks Tamil: 6500mAh பேட்டரி, 50MP ZEISS கேமரா! முழு விபரம். | Vivo V70 Elite passion red color back panel design

50MP ZEISS கேமரா (DSLR in Pocket)

விவோவின் பலமே அதன் போர்ட்ரைட் கேமராதான்.

  • Rear Camera: 50MP மெயின் கேமரா + 8MP அல்ட்ரா வைட்.
  • Telephoto: இதில் 50MP 3X ZEISS Night Telephoto கேமரா உள்ளது. இரவில் கூட துல்லியமான போர்ட்ரைட் எடுக்க இது உதவும்.
  • Special Features: இந்தியாவிற்காகவே பிரத்யேகமாக "AI Holi Festive Portrait" மற்றும் "Flower Blessing" போன்ற மோட்கள் உள்ளனவாம்.!

பேட்டரி மற்றும் ப்ராசஸர் (Big Upgrade)

  • Battery: மெல்லிய போனாக இருந்தாலும், இதில் 6,500mAh பேட்டரி உள்ளது. கூடவே 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்.!
  • Processor:
    • V70: Snapdragon 7 Gen 4.
    • V70 Elite: பவர்ஃபுல் Snapdragon 8s Gen 3 சிப்செட்.
  • Software: ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான OriginOS 6 இதில் இருக்கும்.

Vivo V70 Series Leaks Tamil: 6500mAh பேட்டரி, 50MP ZEISS கேமரா! முழு விபரம். | Vivo V70 Elite passion red color back panel design

விலை என்ன? (Expected Price)

இந்த ப்ரீமியர் மிட்-ரேஞ்ச் போன்கள் இந்தியாவில் ரூ.55,000-க்கு கீழ் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tech Voice Tamil Verdict

வழக்கமாக விவோ V சீரிஸில் பேட்டரி சுமாராகத்தான் இருக்கும். ஆனால் இம்முறை 6500mAh பேட்டரி கொடுத்திருப்பது ஒரு கேம் சேஞ்சர்!

நீங்கள் ஒரு "Social Media Influencer" அல்லது ரீல்ஸ் செய்பவர் என்றால், கண்ணை மூடிக்கொண்டு இதை வாங்கலாம். கேமிங் ஆடுபவர்களுக்கு Snapdragon 8s Gen 3 கொண்ட Elite மாடல் சிறந்த சாய்ஸ்.

Source / நன்றி: இந்தத் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் Smartprix இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

கருத்துரையிடுக