டிசைன் மாறிடுச்சு! Vivo V70 சீரிஸ் லீக்ஸ்! பிப்ரவரியில் வெளியீடு!

Vivo V70 சீரிஸ் விரைவில் இந்தியா வருகிறது! Snapdragon 8s Gen 3, Zeiss கேமரா, 6500mAh பேட்டரி. விலை மற்றும் சிறப்பம்சங்கள் லீக்.
Sabari

டிசைன் மாறிடுச்சு! Vivo V70 சீரிஸ் லீக்ஸ்! பிப்ரவரியில் வெளியீடு!, Vivo V70 series leaked design and camera specifications

Vivo V70 Series India Launch Confirmed: Snapdragon 8s Gen 3, Zeiss Camera and New Design:
ஸ்மார்ட்போன் சந்தையில் "கேமரா கிங்" என்று அழைக்கப்படும் விவோ, தனது அடுத்த Vivo V70 சீரிஸ் போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் தயாராகிவிட்டது. வழக்கமாக வரும் மாடல்களை விட, இம்முறை பல அதிரடி மாற்றங்களுடன் இந்த போன் வரப்போகிறது.

Vivo V70 Series India Launch Confirmed

வெளியான லீக் தகவல்களின்படி, இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கும்? இதோ முழு விபரம்.

புதிய மாடல் அறிமுகம் (New Elite Model)

வழக்கமாக V-சீரிஸில் "Standard" மற்றும் "Pro" மாடல்கள் மட்டுமே வரும். ஆனால் இம்முறை Vivo V70 Elite என்ற புதிய பிரிமியம் மாடல் அறிமுகமாகவுள்ளது. இதுதான் இந்த சீரிஸின் டாப்-எண்ட் மாடலாக இருக்கும்.

விவோ மட்டுமில்ல, பிப்ரவரி மாசம் இன்னும் 5 புது போன் வருது! அந்த லிஸ்ட் தெரியுமா? 👉 பிப்ரவரியில் அதிரடி! Samsung S26 முதல் iQOO வரை.. வெளியாகும் டாப் 5 போன்கள்!

Vivo V70 series leaked design and camera specifications

ப்ராசஸர்: கேமிங் அசுரன்! (Performance)

விவோ என்றாலே கேமரா மட்டும்தான் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு சர்ப்ரைஸ்.

  • Vivo V70 Elite: இதில் சக்திவாய்ந்த Snapdragon 8s Gen 3 சிப்செட் உள்ளது. இது ஃபிளாக்ஷிப் லெவல் பெர்ஃபார்மன்ஸ் கொடுக்கும்.
  • Vivo V70: இதில் Snapdragon 7 Gen 4 சிப்செட் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

கேமரா: ZEISS மேஜிக் (Camera)

முதல்முறையாக விவோவின் மிட்-ரேஞ்ச் போன்களில் Zeiss Optics வருகிறது.

  • 50MP Main Camera (Sony IMX766 சென்சார்).
  • 50MP Periscope Telephoto - இது 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் 100x டிஜிட்டல் ஜூம் செய்யும் வசதி கொண்டது.
  • போர்ட்ரைட் போட்டோக்கள் (Portrait Photos) எடுப்பதில் இது கில்லி.

டிசைன் மாற்றம் (New Design)

பழைய வளைந்த டிஸ்பிளே (Curved Design) முறையை மாற்றி, ஐபோன் போல தட்டையான Flat Frame டிசைனில் இந்த போன் வரலாம். பின்பக்கம் சதுர வடிவ கேமரா மாட்யூல் (Square Camera Module) இருக்கும் என்று லீக் ஆகியுள்ளது.

இதையும் படியுங்கள்: இனி ஆதார் ஜெராக்ஸ் தேவையில்லை! மத்திய அரசின் புதிய ஆப் அறிமுகம்!

Vivo V70 series leaked design and camera specifications

பேட்டரி (Battery)

ஸ்லிம்மான போனாக இருந்தாலும், இதில் 6500mAh என்ற பிரம்மாண்ட பேட்டரி உள்ளது. கூடவே 90W Fast Charging வசதியும் உண்டு.

வெளியீடு மற்றும் விலை (Launch & Price)

  • இந்த போன் பிப்ரவரி மாதம் மத்தியில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • விலை ₹40,000 முதல் ₹55,000 வரை இருக்கலாம்.

இதையும் படியுங்கள்: 10,001mAh பேட்டரி.. ஆனா வெயிட் இவ்ளோ கம்மியா? ஆச்சரியம்!

Tech Voice Verdict

விவோ V சீரிஸ் என்றாலே டிசைன் மற்றும் கேமரா தான். ஆனால் இம்முறை Snapdragon 8s Gen 3 சிப்செட் மற்றும் 6500mAh பேட்டரி கொடுத்திருப்பது மிகப்பெரிய அப்கிரேட்.

விலை மட்டும் ₹45,000-க்குள் வந்தால், இது OnePlus 13R மற்றும் Google Pixel போன்களுக்குக் கடும் போட்டியாக அமையும்! 📸✨

Source / நன்றி: 91mobiles 

கருத்துரையிடுக