OnePlus Nord CE 6 5G : இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மாபெரும் அதிர்வலையை ஏற்படுத்த, பிரபல ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்தடுத்து புதிய மாடல்களைக் களமிறக்கத் தயாராகிவிட்டது. ஏப்ரல் 7 ஆம் தேதி ஒன்பிளஸ் நோர்ட் 6 5ஜி மொபைல் வெளிவரவுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கனும் என்று சொல்லும் அளவிற்கு புதிய OnePlus Nord CE 6 5G மற்றும் அதன் லைட் மாடலான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 லைட் 5ஜி (OnePlus Nord CE 6 Lite 5G) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களின் பிரத்தியேக வெளியீட்டு விபரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
OnePlus Nord CE 6 Battery Details
பேட்டரியைப் பொறுத்தவரை மிட்-ரேஞ்ச் பிரிவில் இது ஒரு கேம் சேஞ்சராக அமையப் போகிறது. 91மொபைல்ஸ் (91mobiles) தளத்தின் அறிக்கையின்படி, வரவிருக்கும் நோர்ட் சிஇ 6 5ஜி மாடலில் பல நாட்கள் உழைக்கக்கூடிய பிரம்மாண்டமான 8000எம்ஏஎச் பேட்டரி (8000mAh battery) இடம்பெறவுள்ளது. இது மிகவும் பாதுகாப்பான சிலிக்கான்-கார்பன் (Silicon-Carbon type) தொழில்நுட்பத்தில் உருவாகவுள்ளது. முந்தைய மாடலான நோர்ட் சிஇ 5-ல் இருந்த 7100எம்ஏஎச் பேட்டரியுடன் ஒப்பிடும்போது இது மிகப்பெரிய அப்கிரேடாகும். இந்த ஆண்டின் பிக் பேட்டரி (Big battery smartphones) ட்ரெண்டிற்கு ஏற்ப ஒன்பிளஸ் நிறுவனம் பட்டையைக் கிளப்பவுள்ளது.
🔥 இன்றைய ட்ரெண்டிங்: 👉 மார்க்கெட்டை மிரட்ட வரும் Vivo T5 Pro! Snapdragon 7s Gen 4 சிப்செட், ராட்சத பேட்டரி விபரம்.
OnePlus Nord CE 6 RAM and Storage
பெர்ஃபார்மன்ஸை மென்மையாக்க, இந்த மொபைல் 8ஜிபி ரேம் (8GB RAM) கொண்ட அடிப்படை வேரியண்டிலும், அதிரடியான 12ஜிபி ரேம் (12GB RAM) கொண்ட டாப் வேரியண்டிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் குறைந்தபட்சம் பிளாக் மற்றும் ஒயிட் (Black and White colors) ஆகிய இரண்டு அட்டகாசமான நிறங்களில் இந்த புதிய மாடல் வெளியாகலாம்.
OnePlus Nord CE 6 Launch Date in India
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த இரண்டு மாடல்களும் வரும் மே 2026-ல் இந்தியாவில் (Launch in India on May 2026) கோலாகலமாக அறிமுகமாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் நோர்ட் 6 5ஜி அறிமுகமான சில நாட்களில், இந்த புதிய மாடல்களுக்கான அதிகாரப்பூர்வ தேதி நிறுவனத்தால் உறுதி செய்யப்படலாம்.
😲 இதையும் மிஸ் பண்ணிடாதீங்க: 👉 பொளந்து கட்டிய OPPO! 8000mAh பேட்டரி, 100W சார்ஜிங்குடன் வெளிவரும் K15 Pro சீரிஸ்.
OnePlus Nord CE 6 Expected Price
விலை நிர்ணயத்தில் ஒன்பிளஸ் ஒரு புதிய வியூகத்தைக் கையாளவுள்ளது. புதிய நோர்ட் 6 மாடல் ரூ.40,000-க்கும் குறைவான பட்ஜெட்டைக் குறிவைப்பதால், இந்த நோர்ட் சிஇ 6 மற்றும் சிஇ 6 லைட் மாடல்கள் அதைவிடக் குறைவான மிட்-ரேஞ்ச் விலையில் (Expected price in India) அறிமுகமாகும். உங்களின் பட்ஜெட் 30,000 ரூபாய்க்கும் (Under 30000) குறைவாக இருந்து, நீண்ட பேட்டரி லைஃப் கொண்ட லேட்டஸ்ட் 5ஜி போனை (Latest 5G phone) வாங்க நினைத்தால், மே மாதம் வரை காத்திருப்பது உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமையும்.