Google Gemini for Home சிறப்பம்சங்கள் மற்றும் புதிய அப்டேட்!

Google Gemini for Home ஸ்பீக்கர்களில் AI வசதி 16 புதிய நாடுகளுக்கும், 7 மொழிகளுக்கும் அதிரடியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மின்னல் வேக அப்டேட்கள்

Google Gemini for Home சிறப்பம்சங்கள் மற்றும் புதிய அப்டேட்கள், google gemini ai for smart home speakers and displays new languages global update

Google Gemini for Home:
நமது வீடுகளில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் (Smart speakers) மற்றும் ஸ்மார்ட் டிஸ்பிளேக்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, கூகுள் நிறுவனம் தங்களது மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) வசதியான ஜெமினியை 'கூகுள் ஹோம்' சாதனங்களில் ஒருங்கிணைத்து வருகிறது. தற்போது இந்த வசதி பல புதிய நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் பிரம்மாண்டமான சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

Google Gemini for Home உலகளாவிய விரிவாக்கம் (Global Expansion)

கடந்த ஆண்டு அமெரிக்காவில் மட்டுமே சோதனையில் இருந்த இந்த ஜெமினி AI வசதி, இப்போது ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 16 புதிய நாடுகளுக்கு அதிரடியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், பயனர்களின் வசதிக்காக பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், ஜப்பானீஸ் போன்ற 7 புதிய மொழிகளுக்கான ஆதரவையும் (Language support) கூகுள் சேர்த்துள்ளது. இது உலகெங்கிலும் உள்ள ஸ்மார்ட் ஹோம் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

📱 ஸ்மார்ட்போன் ஆஃபர்: 👉 9000mAh ராட்சத பேட்டரியுடன் மார்க்கெட்டை அதிரவைக்கும் OnePlus Nord 6!

மின்னல் வேக குரல் தேடல் (Faster Voice Commands)

பொதுவாக ஸ்மார்ட் ஸ்பீக்கர்களிடம் பேசும்போது பதில் வரச் சிறிது நேரம் ஆகும். ஆனால், இந்த புதிய அப்டேட் மூலம் ஜெமினி AI சுமார் 40% அதிவேகமாக செயல்படும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கான மின்னல் வேக பதில்கள் (Lightning fast response) கிடைப்பது மட்டுமின்றி, மனிதர்களிடம் பேசுவதைப் போலவே மிகவும் இயல்பான உரையாடல்களையும் (Natural interactions) மேற்கொள்ள முடியும்.

💻 அமேசான் மாஸ்டர்பிளான்: 👉 எதிரிகளை ஒன்றாக்கிய அமேசான்! பல்லாயிரம் கோடி AI முதலீடு!

google gemini ai for smart home speakers and displays new languages global update

நிகழ்நேர கேமரா தேடல் (Live Camera Search)

கூகுளின் நெஸ்ட் கேமராக்களை (Nest Cam) பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு அட்டகாசமான வரப்பிரசாதம். இந்த புதிய ஜெமினி அப்டேட் மூலம், பிரீமியம் பயனர்கள் தங்களது கேமராவின் நிகழ்நேர பதிவுகளைக் குரல் மூலமாகவே தேடலாம் (Real-time camera search). வீட்டில் என்ன நடக்கிறது என்பதை மிகத் துல்லியமாக AI-விடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும். பாதுகாப்பு அம்சத்தில் கூகுள் நிஜமாகவே தங்களது வாடிக்கையாளர்களை வெச்சி செஞ்சிட்டாங்க! 🥶 வெயிலுக்கு குட் பை: 👉 கழுத்தில் மாட்டும் குட்டி ஏசி! வெறும் ₹8200-க்கு மிரட்டும் Dyson மினி ஃபேன்!

எப்படிப் பயன்படுத்துவது? (Early Access Program)

தற்போது இந்த புதிய வசதிகள் அனைத்தும் கூகுள் ஹோம் ஏர்லி அக்சஸ் (Early Access program) மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாஸான அம்சங்களை நீங்களும் முன்கூட்டியே அனுபவிக்க விரும்பினால், உங்கள் மொபைலில் உள்ள கூகுள் ஹோம் செயலியை (Google Home app) திறந்து, அதிலுள்ள அழைப்பினை (Invitation) உறுதி செய்து இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். வரும் மாதங்களில் இது அனைவருக்கும் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் (Source): androidpolice

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக