Jio Airtel Price Hike 2026 "உஷார் மக்களே! Jio, Airtel, Vi கட்டணங்கள் மீண்டும் உயர்கிறதா? 2026 அதிர்ச்சி ரிப்போர்ட்!": இந்தியாவில் உள்ள முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் விஐ (Vi) வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.
உஷார் மக்களே! Jio, Airtel, Vi கட்டணங்கள் மீண்டும் உயர்கிறதா? 2026 அதிர்ச்சி ரிப்போர்ட்!
Telecom Price Hike 2026
மொபைல் கட்டண உயர்வு: சமீபத்திய அறிக்கைகளின்படி, முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்களது ஒரு வாடிக்கையாளரிடமிருந்து கிடைக்கும் சராசரி வருவாயை (Average Revenue Per User - ARPU) அதிகரிக்கத் தீவிரமாகத் திட்டமிட்டுள்ளன. இதற்காக வருகிற மாதங்களில் ரீசார்ஜ் கட்டணங்களை 15 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்த (Price hike coming soon) முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் நிறுவனங்களின் லாபம் பிரம்மாண்டமான (Massive profit) அளவில் அதிகரிக்கும் என டெலிகாம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
💸 பணப்பரிமாற்றத்தில் புதிய வசதி: 👉 UPI பின் நம்பர் தேவையில்லை! PhonePe கொண்டுவந்த அதிரடி பயோமெட்ரிக் அப்டேட்!
28 Days Recharge Scam
28 நாட்கள் ரீசார்ஜ் மோசடி: டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை எப்படி வெச்சி செஞ்சிட்டாங்க என்பதற்கு இந்த 28 நாள் ரீசார்ஜ் திட்டங்களே சிறந்த உதாரணம். பொதுவாக ஒரு மாதத்திற்கு 30 அல்லது 31 நாட்கள் எனில், வருடத்திற்கு 12 முறை தான் ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஆனால், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்த 28 நாள் வேலிடிட்டி திட்டத்தால் (28 days validity plan) வாடிக்கையாளர்கள் வருடத்திற்கு 13 முறை ரீசார்ஜ் செய்யும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது சாமானிய மக்களின் பாக்கெட்டைப் பதம் பார்க்கும் ஒரு தந்திரமாகும்.
TRAI New Rules For Telecom
டிராய் புதிய விதிமுறைகள்: நம்மில் பல வாடிக்கையாளர்களுக்கு இன்டர்நெட் டேட்டா தேவைப்படுவதில்லை, வெறும் இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் கால்கள் மட்டுமே போதுமானதாக உள்ளது. இதனை உணர்ந்த இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI), டேட்டா இல்லாமல் வெறும் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் (Voice calls and SMS only) சேவைகளை மட்டும் உள்ளடக்கிய அட்டகாசமான குறைவான விலை ரீசார்ஜ் திட்டங்களை (Low cost recharge plans) கட்டாயமாக வழங்க வேண்டும் என டெலிகாம் நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
💰 சேமிப்புத் திட்டம்: 👉 பணத்தை டபுள் ஆக்கும் அரசாங்க திட்டம்! 2026 அஞ்சலக வட்டி விகிதங்கள் வெளியீடு!
Jio Airtel Affordable Plans
குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்கள்: வாடிக்கையாளர்களின் அன்றாடத் தேவையைப் புரிந்துகொண்டு, அதிகப்படியான மற்றும் தேவையற்ற டேட்டா பேக்குகளைத் திணிக்காமல், அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற வகையிலான மலிவு விலை திட்டங்களை (Affordable mobile plans) வழங்க வேண்டும் என்பதே சாமானியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. டிராயின் இந்த புதிய மற்றும் சக்திவாய்ந்த (Powerful network rules) விதிமுறைகளை டெலிகாம் நிறுவனங்கள் முறையாகப் பின்பற்றினால், மொபைல் போன் ரீசார்ஜ் செலவு கணிசமாகக் குறையும் என்பதில் சந்தேகமில்லை.
