இந்திய சந்தையில் தனது புதிய இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ (Infinix Note 60 Pro) ஸ்மார்ட்போனை ஏப்ரல் 13-ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். இதுவரையில் மீடியாடெக் ப்ராசஸர்களை மட்டுமே பயன்படுத்தி வந்த இந்நிறுவனம், முதல்முறையாக ஒரு சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் சிப்செட்டுடன் (Snapdragon processor) களமிறங்குவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கேமர்களை குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த அட்டகாசமான மொபைலின் சிறப்பு அம்சங்கள் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல்களை விரிவாகப் பார்க்கலாம்.
Infinix Note 60 Pro Processor Details
இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ப்ராசஸர்: இந்த மாஸான ஸ்மார்ட்போனில் 4nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 (Snapdragon 7s Gen 4 SoC) சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இதன் 2.7GHz கிளாக் ஸ்பீடு மற்றும் 1 மில்லியனைத் தாண்டும் AnTuTu ஸ்கோர் ஆகியவை, போனின் பிரம்மாண்டமான செயல்பாட்டிற்கு (Massive performance) உத்தரவாதம் அளிக்கின்றன. கேமிங் விளையாடும்போது ஏற்படும் வெப்பத்தைக் குறைக்க சிறப்பு கூலிங் சிஸ்டம் இருப்பதனால், எந்த ஒரு லேக் (Lag) பிரச்சனையும் இல்லாமல் வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கனும் என்ற அளவிலான உச்சகட்ட கேமிங் அனுபவத்தைப் பெறலாம்.
📱 ஸ்னாப்டிராகன் ப்ராசஸர் போன்: 👉 OnePlus-ஐ கதறவிட வரும் iQOO 16! மாஸ் காட்டும் லீக்ஸ்!
Call of Duty Mobile Special Edition
கால் ஆஃப் டியூட்டி சிறப்பு பதிப்பு: மொபைல் கேமிங் பிரியர்களைக் கவர்ந்திழுக்க, இதற்கென ஒரு பிரத்யேக சிஓடி மொபைல் எடிஷனையும் (COD Mobile special edition) இன்பினிக்ஸ் வெளியிடுகிறது. மேலும், இந்த போன் 120 FPS வேகத்தில் தடையின்றி (Stable 120 FPS gameplay) விளையாடுவதற்கு ஏற்ப ஆக்டிவிஷன் (Activision) நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாகச் சான்றளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆடியோ தரத்திற்காக புகழ்பெற்ற JBL நிறுவனத்தின் துல்லியமான ஆடியோ வசதியும் (Spatial sound) சேர்க்கப்பட்டுள்ளதால், கேமிங் களத்தில் எதிரிகளை ஈஸியாக வீழ்த்தி கேமர்களை இது வெச்சி செஞ்சிட்டாங்க என்றே சொல்லலாம்.
🚨 முக்கியமான மொபைல் அப்டேட்: 👉 உஷார் மக்களே! Jio, Airtel, Vi கட்டணங்கள் மீண்டும் உயர்கிறதா? TRAI புதிய ரூல்ஸ்!
Rear Display and AI Button Features
பின்புற டிஸ்பிளே மற்றும் ஏஐ பட்டன்: இந்த போனின் பின்புறம் வித்தியாசமான எல்இடி அனிமேஷன்களுடன் கூடிய சிறிய டிஸ்பிளே (Secondary rear display) கொடுக்கப்பட்டுள்ளது. இது போனின் மாஸ் டிசைனை மேலும் பல மடங்கு மெருகேற்றுகிறது. இதோடு மட்டுமில்லாமல், ஒரே கிளிக்கில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தக்கூடிய பிரத்யேக ஏஐ பட்டன் (One-Tap AI button) ஒன்று புதிதாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கேமரா ப்ராசஸிங், பெர்ஃபார்மன்ஸ் ஆப்டிமைசேஷன் மற்றும் தினசரிப் பயன்பாடுகளை மிக வேகமாகவும், ஸ்மார்ட்டாகவும் செய்ய முடியும்.
Best Mid Range Gaming Phone
சிறந்த பட்ஜெட் கேமிங் போன்: பிளாக்ஷிப் போன்களில் (Flagship smartphones) மட்டுமே கிடைக்கும் பல பிரீமியம் அம்சங்களை, ஒரு பட்ஜெட் விலையில் கொடுக்க இன்பினிக்ஸ் முடிவு செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக கம்மி பட்ஜெட்டில் ஒரு ராட்சத கேமிங் மொபைலை (Gaming mobile) தேடும் இளைஞர்களுக்கு இது மிகச் சரியான சாய்ஸ் ஆகும்.

