ரூ.200-க்கு இத்தனை OTT ஆப்ஸா? வெச்சி செய்யும் ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டங்கள்!

Amazon Prime, JioHotstar, YouTube Premium என 14 OTT சந்தாக்களுடன் ஜியோ அதிரடியாக அறிமுகம் செய்துள்ள ரூ.200 திட்டங்கள்.,ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டங்

jio rs 200 mega content add on pack rs 500 plan with 14 ott apps amazon prime jiohotstar youtube premium in tamil, ரூ.200-க்கு இத்தனை OTT ஆப்ஸா? வெச்சி செய்யும் ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டங்கள்!

ரூ.200-க்கு இத்தனை OTT ஆப்ஸா? வெச்சி செய்யும் ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டங்கள்!: இந்திய டெலிகாம் (Telecom) சந்தையில் ஜியோ நிறுவனம் எப்போதுமே வாடிக்கையாளர்களுக்கு பல அட்டகாசமான சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக மற்ற டெலிகாம் நிறுவனங்களை வெச்சி செஞ்சிட்டாங்க என்று சொல்லும் அளவிற்கு கம்மி விலையில் பல பிரம்மாண்டமான திட்டங்களை ஜியோ தொடர்ந்து வழங்கி வருகிறது.

ரூ.200-க்கு ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டங்கள்!

அந்த வகையில், தற்போது திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் பார்க்கும் ஓடிடி பிரியர்களுக்கு ஒரு செம சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக, ரூ.200 மற்றும் ரூ.500 விலையில் இரண்டு புதிய மெகா கன்டென்ட் ரீசார்ஜ் திட்டங்களை ஜியோ அதிரடியாக அறிமுகம் செய்துள்ளது. வாங்குனா இப்படி ஒரு பிளான் வாங்கனும் என்று சொல்ல வைக்கும் இதன் முழு விபரங்களை இப்போது பார்ப்போம்.

பிளாக்கர்களுக்கு செம ட்ரிக்: 👉 மாதம் ரூ.500 தண்டச் செலவா? 1 ரூபாய் கூட இல்லாமல் Business Email உருவாக்குவது எப்படி?

jio rs 200 mega content add on pack rs 500 plan with 14 ott apps amazon prime jiohotstar youtube premium in tamil

Jio Rs 200 Add-on Pack Details

ரூ.200 ஆட்-ஆன் பேக் விபரங்கள்: (Rs 200 add-on pack) ஜியோவின் இந்த புதிய ரூ.200 திட்டம் ஒரு டேட்டா பேக் (Data pack) ஆகும். அதாவது, இதில் நீங்கள் வாய்ஸ் கால் அல்லது எஸ்எம்எஸ் (No voice or SMS) செய்ய முடியாது. இதைப் பயன்படுத்த உங்களிடம் ஏற்கனவே ஒரு ஆக்டிவ் பிளான் (Active base plan) இருக்க வேண்டும்.

இந்த அட்டகாசமான ஆட்-ஆன் திட்டத்தில் உங்களுக்கு 5ஜிபி டேட்டா (5GB internet data) வழங்கப்படும். இதன் வேலிடிட்டி 28 நாட்கள் (28 days validity) ஆகும். இதில் டேட்டாவை விட, வழங்கப்படும் கூடுதல் சலுகைகள் தான் மிகவும் பிரம்மாண்டமானவை.

யூடியூப் பிரீமியம், ஜியோஹாட்ஸ்டார் மொபைல், அமேசான் பிரைம் (Amazon Prime subscription), சோனி லைவ் (SonyLIV), ஜீ5, சன் நெக்ஸ்ட் (Sun NXT), டிஸ்கவரி+ என மொத்தம் 14-க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்கள் (Multiple OTT apps) மற்றும் ஜியோகேம்ஸ் சந்தாவும் இதில் முற்றிலும் இலவசமாகக் கிடைக்கிறது.

கேமிங் உலகை மிரட்டும் போன்: 👉 ஸ்மார்ட்போனா இல்ல ப்ளேஸ்டேஷனா? மாஸ் காட்டும் OnePlus Ace 6 Ultra.. வாங்குனா இப்படி ஒன்னு வாங்கனும்!

jio rs 200 mega content add on pack rs 500 plan with 14 ott apps amazon prime jiohotstar youtube premium in tamil

Jio Rs 500 Mega Content Plan

ரூ.500 மெகா கன்டென்ட் திட்டம்: (Rs 500 mega content plan) ஒருவேளை உங்களுக்கு டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் ஓடிடி என அனைத்தும் ஒரே பேக்கில் (All in one plan) வேண்டும் என்றால், இந்த ரூ.500 திட்டத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதில் தினசரி 2ஜிபி டேட்டா (2GB daily data) வீதம் மொத்தம் 56ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும்.

அத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited voice calls), தினமும் 100 எஸ்எம்எஸ் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. கூடுதல் நன்மைகளாக கூகுள் ஜெமினி ப்ரோ (Google Gemini Pro), ஜியோ டிவி, ஜியோ கிளவுட் சேவைகளும் இதில் அடங்கும்.

Premium OTT Benefits Included

பிரீமியம் ஓடிடி சலுகைகள்: ஜியோவின் புதிய ரீசார்ஜ் (Premium OTT benefits) ரூ.200 திட்டத்தில் கிடைக்கும் அதே 14 ஓடிடி சலுகைகள் (14 OTT subscriptions) இந்த ரூ.500 திட்டத்திலும் வழங்கப்படுகிறது. யூடியூப் பிரீமியம் (YouTube Premium), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனி லைவ், ஜீ5 (ZEE5), சன் நெக்ஸ்ட் உள்ளிட்ட பல முன்னணி தளங்களை நீங்கள் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பொசுக்குனு தனியாக ஓடிடி சந்தா வாங்கினால் பல ஆயிரங்கள் செலவாகும் நிலையில், ஜியோவின் இந்த மாஸான திட்டங்கள் திரைப்பட பிரியர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

மேலும் ரீசார்ஜ் விபரங்களுக்கு: 👉 ஜியோ (Jio) அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக