OnePlus-ன் New 120W Dual-Port, 100W GaN சார்ஜர்கள் அறிமுகம்!: ஸ்மார்ட்போன் சந்தையில் எப்போதுமே ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தில் மாஸ் காட்டும் ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம், இப்போது தனது வாடிக்கையாளர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ள புதிய ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா (OnePlus Ace 6 Ultra) ஸ்மார்ட்போனுடன் சேர்த்து, இரண்டு புதிய பவர்ஃபுல் சார்ஜர்களை சந்தையில் களமிறக்குகிறது. இனி சார்ஜ் ஆகுமா என்று மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை. இதன் முக்கிய அம்சங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.
OnePlus 120W Dual Port Charger
120W டூயல் போர்ட் சார்ஜர்: (OnePlus 120W Dual Port Charger) வாங்குனா இப்படி ஒரு சார்ஜர் வாங்கனும் என்று சொல்லும் அளவிற்கு, ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களை மின்னல் வேகத்தில் சார்ஜ் செய்யக்கூடிய வசதியுடன் இந்த புதிய 120W டூயல் போர்ட் சார்ஜர் அறிமுகமாகிறது. இது அதிகபட்சமாக 125W அவுட்புட் (125W output) பவரை வழங்கும் திறன் கொண்டது. இதன் மூலம் உங்களின் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை ஒரே நேரத்தில் தடையின்றி அதிவேகமாக சார்ஜ் (Fast charging) செய்துகொள்ள முடியும். அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
OnePlus 100W GaN Charger
100W GaN சார்ஜர்: (OnePlus 100W GaN Charger) டூயல் போர்ட் மாடல் மட்டுமின்றி, கச்சிதமான வடிவமைப்பில் ஒரு 100W கேலியம் நைட்ரைடு (Gallium Nitride charger) சார்ஜரையும் ஒன்பிளஸ் அறிமுகப்படுத்துகிறது. சாதாரண சிலிக்கான் சார்ஜர்களை விட இந்த அட்வான்ஸ்டு GaN தொழில்நுட்பம் (GaN technology) சார்ஜ் ஏறும்போது குறைந்த வெப்பத்தை உருவாக்குவதோடு, மிகவும் பாதுகாப்பாகவும் அதிக திறனுடனும் செயல்படும். இதன் ப்ரோ வேரியண்ட் (Pro variant) பலவிதமான எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு சிறப்பான கனெக்டிவிட்டி சப்போர்ட்டை தாராளமாக வழங்குகிறது.
Premium Design and Silicone Cables
பிரீமியம் டிசைன் மற்றும் கேபிள்கள்: (Premium design and cables) இந்த புதிய ஒன்பிளஸ் சார்ஜர்கள் முந்தைய மாடல்களை விட மிகவும் மேம்பட்ட பினிஷிங் (Upgraded finishes) மற்றும் குறைந்த எடையுடன் கச்சிதமாக (Compact design) வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், பெட்டியில் மிகவும் மென்மையான மற்றும் தரமான சிலிகான் கேபிள்கள் (Soft silicone cables) வழங்கப்படும் என நிறுவனம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நீண்ட நாட்கள் உழைக்கும் வகையில் உறுதியாகவும் நேர்த்தியாகவும் இருக்கும்.
மேலும் படிக்க: 👉 மிரட்டி விட்டாப்ல! 200 எம்பி கேமரா சப்போர்ட்.. புது MediaTek Dimensity 7450 சிப்செட் மாஸாக அறிமுகம்!
OnePlus Ace 6 Ultra Battery Specs
ஏஸ் 6 அல்ட்ரா பேட்டரி: (OnePlus Ace 6 Ultra battery) ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த மாஸான சார்ஜர்கள், புதிய [OnePlus Ace 6 Ultra] ஸ்மார்ட்போனுக்காகவே பிரத்யேகமாக களமிறக்கப்படுகின்றன. ஏனென்றால், இந்த போன் பிரம்மாண்டமான 8,600mAh பேட்டரியை (Massive 8,600mAh battery) பேக் செய்துள்ளது. இவ்வளவு பெரிய முரட்டு பேட்டரியை வெறும் சில நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யவே, இந்த 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் (120W wired fast charging) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேமிங் பிரியர்களுக்கு இது ஒரு சிறப்பான ட்ரீட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
Source: Gadgets360
