இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அடுத்த வாரம் ஒரு மிகப்பெரிய டெக் திருவிழா நடக்கப்போகிறது. பிரபல சிப்செட் தயாரிப்பு நிறுவனமான குவால்காம் (Qualcomm), இந்தியாவில் தனது 'ஸ்னாப்டிராகன் ஃபார் இந்தியா' (Snapdragon for India) ஈவென்ட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதே நாளில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 (OnePlus Nord CE 6) ஸ்மார்ட்போன் தொடரும் இந்தியாவில் களமிறங்குகிறது. இதன் முழு விபரங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.
.#SnapdragonForIndia returns on May 7, and we’ve saved the best for now. Catch us LIVE for the big reveal.@Snapdragon pic.twitter.com/mzpwMAiclk
— Snapdragon India (@Snapdragon_IN) April 27, 2026
Snapdragon For India Event 2026
ஸ்னாப்டிராகன் ஃபார் இந்தியா: (Snapdragon For India Event 2026) இந்தியாவில் குவால்காம் நிறுவனம் வரும் மே 7 ஆம் தேதி தனது பிரம்மாண்டமான ஈவென்ட்டை நடத்தவுள்ளது. அன்றாட பயன்பாட்டை மாற்றி அமைக்கும் விதமான (Redefining everyday experience) பல புதிய AI தொழில்நுட்பங்களை (AI-powered Snapdragon devices) இந்த நிகழ்வில் குவால்காம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த ஈவென்ட்டில் மாருதி சுசுகி, மஹிந்திரா போன்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்த குவால்காம், இந்த முறை ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுடன் இணைந்து பல மாஸான அறிவிப்புகளை வெளியிடவுள்ளது.
மேலும் படிக்க: 👉 வெச்சி செஞ்சிட்டாங்க! OnePlus Ace 6 Ultra உடன் வெளியாகும் பவர்ஃபுல் 120W & 100W GaN சார்ஜர்கள்!
OnePlus Nord CE 6 Series Launch
ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 அறிமுகம்: (OnePlus Nord CE 6 Series Launch) இந்த குவால்காம் ஈவென்ட் நடக்கும் அதே மே 7 ஆம் தேதியில் தான், ஒன்பிளஸ் நிறுவனமும் தனது புதிய நார்ட் சிஇ 6 தொடரை (Nord CE 6 series) இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இந்த சீரிஸில் நார்ட் சிஇ 6 மற்றும் நார்ட் சிஇ 6 லைட் (OnePlus Nord CE 6 Lite) ஆகிய இரண்டு மாடல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.
Nord CE 6 Features and Specifications
முரட்டு பேட்டரி மற்றும் அம்சங்கள்: (Nord CE 6 Features and Specifications) சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, புதிய ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 (Snapdragon 7s Gen 4 SoC) சிப்செட் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. மேலும் இதில் 1.5K ரெசொலூஷன் கொண்ட அட்டகாசமான 144Hz ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. கேமராவிற்கு 50 எம்பி மெயின் சென்சார் மற்றும் 32 எம்பி செல்பி கேமரா உள்ளது. அனைத்திற்கும் மேலாக, பல நாட்கள் தாக்குப் பிடிக்கும் வகையில் பிரம்மாண்டமான 8,000mAh பேட்டரி (8000mAh battery) மற்றும் 27W ரிவர்ஸ் சார்ஜிங் வசதியுடன் இந்த போன் மிரட்டவுள்ளது. இது ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட OxygenOS 16-ல் இயங்கும்.
Vivo X300 Series Launch
விவோ X300 தொடர் வெளியீடு: (Vivo X300 Series Launch) ஒன்பிளஸ் ஒருபுறம் மாஸ் காட்ட, மறுபுறம் விவோ நிறுவனமும் தனது பவர்ஃபுல்லான விவோ எக்ஸ்300 அல்ட்ரா (Vivo X300 Ultra) மற்றும் விவோ எக்ஸ்300 எஃப்இ (Vivo X300 FE) மாடல்களை மே 6 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இதில் X300 FE மாடலானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப்செட்டுடனும், பிரீமியம் X300 Ultra மாடலானது அட்வான்ஸ்டான ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5 platform) சிப்செட்டுடனும் சக்கைப்போடு போட சந்தையில் களமிறங்குகிறது.