மே 7-ல் பட்ஜெட் விலையில் களமிறங்கும் OnePlus Nord CE 6 Lite!

7000mAh பேட்டரி, 144Hz டிஸ்பிளே மற்றும் Dimensity 7400 Apex சிப்செட்டுடன் மே 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் OnePlus Nord CE 6 Lite ஸ்மார்ட்போனின்
oneplus nord ce 6 lite price in india launch date may 7 specifications 7000mah battery dimensity 7400 apex features in tamil, மே 7-ல் பட்ஜெட் விலையில் களமிறங்கும் OnePlus Nord CE 6 Lite!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அடுத்த வாரம் ஒரு மிகப்பெரிய டெக் திருவிழா நடக்கப்போகிறது. பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் (OnePlus), தனது வெற்றிகரமான Nord CE தொடரில், புதிய 'ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6' (OnePlus Nord CE 6) சீரிஸை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் பிரீமியம் மாடலுடன் சேர்த்து, பட்ஜெட் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் (OnePlus Nord CE 6 Lite) என்ற மாடலும் மாஸாக களமிறங்குகிறது. இதன் வெளியீட்டு தேதி, விலை மற்றும் மிரட்டலான சிறப்பம்சங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

OnePlus Nord CE 6 Lite India Launch Date

இந்திய வெளியீட்டு தேதி மற்றும் விலை: (India Launch Date and Price) புதிய ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் ஸ்மார்ட்போன், மே 7 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் அப்டேட் செய்யப்பட்ட மைக்ரோசைட் தகவலின்படி, இந்த அட்டகாசமான போன் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரையிலான பட்ஜெட் விலையில் (Priced between Rs. 20,000 and Rs. 25,000) விற்பனைக்கு வரவுள்ளது. இந்த பட்ஜெட்டில் இதுதான் இந்தியாவின் மிக வேகமான போனாக (Fastest phone) இருக்கும் என நிறுவனம் உறுதியளித்துள்ளது.

Processor and AnTuTu Score Performance

சிப்செட் மற்றும் அன்டுடு ஸ்கோர்: (Processor and AnTuTu Score) பெர்ஃபார்மன்ஸைப் பொறுத்தவரை, ஸ்டாண்டர்ட் மாடலான Nord CE 6-ல் ஸ்னாப்டிராகன் சிப்செட் இடம்பெற்றுள்ள நிலையில், இந்த லைட் மாடலில் பவர்ஃபுல்லான மீடியாடெக் டைமென்சிட்டி 7400 எபெக்ஸ் (MediaTek Dimensity 7400 Apex chipset) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இது மிரட்டலான கேமிங் அனுபவத்தை வழங்கும். மேலும், இந்த ஸ்மார்ட்போன் அன்டுடு பெஞ்ச்மார்க் (AnTuTu benchmarking platform) தளத்தில் 10,30,000-க்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்று மாஸ் காட்டியுள்ளது.

மேலும் படிக்க: 👉 மாஸான அப்டேட்! அடுத்த வாரம் இந்தியாவில் நடக்கும் Snapdragon ஈவென்ட்.. வெளியாகும் புதிய ஸ்மார்ட்போன்கள் விபரம்!

oneplus nord ce 6 lite price in india launch date may 7 specifications 7000mah battery dimensity 7400 apex features in tamil

Flat AMOLED Display and 144Hz Refresh Rate

டிஸ்பிளே மற்றும் ரெஃப்ரெஷ் ரேட்: (Flat AMOLED Display and Refresh Rate) டிஸ்பிளேவைப் பொறுத்தவரை, ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் ஸ்மார்ட்போனில் தட்டையான ஸ்கிரீன் (Flat screen) மற்றும் செல்பி கேமராவிற்கான பஞ்ச்-ஹோல் கட்அவுட் (Hole-punch display cutout) கொடுக்கப்பட்டுள்ளது. கேமிங் மற்றும் வீடியோக்களுக்குத் தடையற்ற அனுபவத்தை வழங்க, இது பிரம்மாண்டமான 144Hz ரெஃப்ரெஷ் ரேட் (144Hz of refresh rate) சப்போர்ட்டுடன் வருகிறது. சப்வே சர்ஃபர்ஸ் (Subway Surfers) போன்ற கேம்களை 144 fps-லும், BGMI மற்றும் CODM போன்ற ஹெவி கேம்களை 90 fps-லும் எந்தவொரு லேக்கும் இல்லாமல் மிக ஸ்மூத்தாக விளையாட முடியும்.

Massive 7000mAh Battery Power

முரட்டு பேட்டரி மற்றும் ஓஎஸ்: (Massive 7000mAh Battery) பேட்டரி செக்மெண்டில் தான் இந்த போன் போட்டியாளர்களை வெச்சி செஞ்சிருக்கு! பல நாட்கள் தாக்குப் பிடிக்கும் வகையில் இதில் பிரம்மாண்டமான 7,000mAh பேட்டரி (7,000mAh battery) பேக் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 2 நாட்களுக்கு சார்ஜ் பற்றிய கவலையே இல்லாமல் பயன்படுத்தலாம். மேலும் 1,200 முழு சார்ஜிங் சுழற்சிகளுக்குப் (Charge cycles) பிறகும் பேட்டரி ஹெல்த் குறையாமல் உறுதியாக இருக்கும். இது லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 (Android 16 OS) சார்ந்த ஆக்ஸிஜன் ஓஎஸ் 16-ல் (OxygenOS 16) இயங்குகிறது. ஐந்து வருடங்களுக்கு எந்தவொரு ஹேங்க் பிரச்சனையும் இல்லாமல் போன் ஸ்மூத்தாகச் செயல்படும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.

Camera Specifications and Features

கேமரா அம்சங்கள்: (Camera Specifications and Features) கேமரா பிரியர்களுக்காக, இதன் பின்பக்கம் மாஸான பில்-ஷேப்ட் (Pill-shaped) கேமரா மாட்யூலில் டூயல் ரியர் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 50 எம்பி மெயின் கேமரா (50-megapixel primary camera) இடம்பெற்றுள்ளது. இது தரமான 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 4K மோஷன் போட்டோக்களை (4K Motion Photos) எடுக்கும் திறன் கொண்டது. மொத்தத்தில், 20 ஆயிரத்திற்குள் ஒரு ஆல்-ரவுண்டர் போன் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த ஒன்பிளஸ் மாடல் ஒரு ஜாக்பாட்.!

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக