ஸ்மார்ட்போன் சந்தையில் எப்போதுமே தனது பிரீமியம் அம்சங்களால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம், இப்போது ஒரு மாஸான 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா (OnePlus Ace 6 Ultra) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன் ஏப்ரல் 28 ஆம் தேதி சீனாவில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கியுள்ளது. விரைவில் இது இந்தியாவிலும் வெளியாகவுள்ள நிலையில், இதன் பிரம்மாண்டமான சிறப்பம்சங்கள் மற்றும் விலைப் பட்டியலை இப்போது விரிவாகப் பார்ப்போம்.
OnePlus Ace 6 Ultra Display Specs
அமோலெட் டிஸ்பிளே விபரங்கள்: (AMOLED display features) கேமிங் மற்றும் வீடியோக்களுக்கு ஒரு செம ட்ரீட்டாக, இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் அளவிலான ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (Full HD+ AMOLED display) கொடுக்கப்பட்டுள்ளது. கேமிங் விளையாட எந்தவொரு லேக்கும் இல்லாமல் இருக்க, இதில் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate) மற்றும் 480Hz டச் சாம்பிளிங் ரேட் வழங்கப்பட்டுள்ளது. 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளதால் வெயிலிலும் திரை மிகத் தெளிவாகத் தெரியும்.
மேலும் படிக்க: 👉 மார்க்கெட்டே மிரள போகுது.. Nord CE 6 VS Lite.. எந்த போன் வாங்குவது பெஸ்ட்? வாங்கும் முன் இதை படிங்க!
MediaTek Dimensity 9500 Processor
ப்ராசஸர் மற்றும் கூலிங் சிஸ்டம்: (Processor and cooling) பெர்ஃபார்மன்ஸிற்காக, பவர்ஃபுல்லான மீடியாடெக் டைமென்சிட்டி 9500 (MediaTek Dimensity 9500 SoC) சிப்செட் இதில் பொருத்தப்பட்டுள்ளது. கேமிங் பிரியர்களுக்காக பிரத்யேக ஆர்ம் மாலி ஜிபியு கிராபிக்ஸ் சப்போர்ட் உள்ளது. மேலும், போன் சூடாகாமல் தடுக்க 6000mm² வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் (Vapor chamber cooling) கொடுக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ColorOS 16-ல் இயங்குகிறது.
Camera and Battery Features
கேமரா மற்றும் முரட்டு பேட்டரி: (Camera and massive battery) இதன் பின்பக்க மாட்யூலில் OIS சப்போர்ட் கொண்ட 50 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என டூயல் கேமரா (50MP dual rear camera) இடம்பெற்றுள்ளது. இது 4K வீடியோ ரெக்கார்டிங் செய்யக்கூடியது. முன்பக்கத்தில் 16 எம்பி செல்பி கேமரா உள்ளது. இந்த போனின் மிக முக்கியமான ஹைலைட்டே இதன் 8600mAh ராட்சத பேட்டரி (Massive 8600mAh battery) தான். தொடர்ந்து 2 நாளுக்கு சார்ஜ் நிக்கும் இந்த பேட்டரியை மின்னல் வேகத்தில் சார்ஜ் செய்ய 120W ஃபாஸ்ட் சார்ஜிங் (120W fast charging) வசதியும் உள்ளது.
மேலும் படிக்க: 👉 டிஜிட்டல் இந்தியாவிற்கு செம பூஸ்ட்.. 20,941 அங்கன்வாடி ஊழியர்களுக்கு Lava ஸ்மார்ட்போன்களை வழங்கும் அரசாங்கம்!
Full IP Rating and Security
பாதுகாப்பு அம்சங்கள்: (IP Rating and security) வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கனும் என்று சொல்லும் அளவிற்கு, இது IP66, IP68, IP69 மற்றும் IP69K என அனைத்து விதமான டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Water and dust resistance) ரேட்டிங்குகளையும் பெற்றுள்ளது. மேலும் பாதுகாப்பிற்காக இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் பிங்கர்பிரிண்ட் சென்சாரும் (In-display fingerprint) உள்ளது.
OnePlus Ace 6 Ultra Price List
ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா விலைப் பட்டியல்: (OnePlus Ace 6 Ultra price details) ஏஸ் அவேக்கனிங் மற்றும் மெட்டல் ஸ்டார்ம் ஆகிய நிறங்களில் வெளியாகும் இதன் அனைத்து வேரியண்ட்களின் இந்திய மதிப்பிலான விலை விபரம் இதோ:
- 12GB ரேம் + 256GB மெமரி மாடல் விலை: ரூ.48,400 (CNY 3,499)
- 12GB ரேம் + 512GB மெமரி மாடல் விலை: ரூ.52,500 (CNY 3,799)
- 16GB ரேம் + 256GB மெமரி மாடல் விலை: ரூ.56,700 (CNY 4,099)
- 16GB ரேம் + 512GB மெமரி மாடல் விலை: ரூ.60,800 (CNY 4,399)
- 16GB ரேம் + 1TB மெமரி மாடல் விலை: ரூ.75,500 (CNY 5,099)

