![]() |
| image source: tamil.gizbot |
OPPO K14 5G Overview: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் எப்போதுமே ரூ.25,000 பட்ஜெட்டில் (Under INR 25,000) பல மாடல்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக சாம்சங் மற்றும் விவோ (Samsung vs Vivo) போன்ற பிராண்டுகளுக்கு இடையே நடக்கும் போட்டியில், தற்போது ஒரு புதிய "லேக் கில்லர்" (Lag killer) ஸ்மார்ட்போன் அதிரடியாக களமிறங்கியுள்ளது.
பல ஸ்மார்ட்போன்கள் புதிதாக வாங்கிய சில மாதங்களிலேயே வேகம் குறைந்து ஹேங் ஆக ஆரம்பித்துவிடும். ஆனால், இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து, நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தும் வகையில் ஒப்போ கே14 5ஜி (OPPO K14 5G) ஸ்மார்ட்போன் பிரம்மாண்டமாக அறிமுகமாகியுள்ளது. மற்ற நிறுவனங்களை வெச்சி செஞ்சிட்டாங்க என்று சொல்லும் இதன் ஓவர்வியூ மற்றும் முக்கிய சிறப்பம்சங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.
Long Term Smoothness and Performance
நீண்ட கால சீரான செயல்திறன்: (Segment smoothest performer) பல ஆப்களை ஒரே நேரத்தில் திறப்பது, ஸ்ப்ளிட்-ஸ்கிரீன் பயன்படுத்துவது என அனைத்தையும் மிக ஸ்மூத்தாக செய்ய சக்திவாய்ந்த மீடியாடெக் டைமென்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனின் மிகப்பெரிய ஹைலைட் இதன் 60 மாதங்களுக்கான ஃபுளூயன்சி ப்ரொடெக்ஷன் (60 months fluency protection) வசதிதான். அதாவது, அடுத்த 5 வருடங்களுக்கு இந்த மொபைலை நீங்கள் பயன்படுத்தினாலும், புதிதாக வாங்கிய போது இருந்த அதே வேகம் கொஞ்சமும் குறையாமல் எவ்வித தடையுமின்றி (Lag free experience) வேலை செய்யும் என நிறுவனம் உறுதியளிக்கிறது.
ரெட்மியின் புதிய ராட்சத போன்: 👉 பவர் பேங்க் இனி தேவையில்லை! 10000mAh பேட்டரியுடன் மிரட்ட வரும் Redmi Note 17 Pro Max!
![]() |
| image source: tamil.gizbot |
Military Grade Design and AI Camera
மிலிட்டரி தர டிசைன் மற்றும் ஏஐ கேமரா: (Military grade design and AI camera) நீங்கள் மொபைலை எப்படி பயன்படுத்தினாலும் தாங்கிக் கொள்ளும் வகையில் MIL-STD-810H மிலிட்டரி தர சோதனைகளை இந்த போன் கடந்துள்ளது. மேலும் IP66, IP68 மற்றும் IP69 (Water and dust resistant) சான்றிதழ்களுடன் தண்ணீர், தூசியால் பாதிக்கப்படாத வகையில் இது மிகவும் வலிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
புகைப்படம் எடுப்பதற்காக 50MP AI கேமரா (50MP AI camera) இதில் கொடுக்கப்பட்டுள்ளது. தேவையற்ற நபர்களை நீக்கும் AI Eraser 2.0 மற்றும் மங்கலான புகைப்படங்களை சரிசெய்யும் AI Unblur போன்ற பல லேட்டஸ்ட் ஏஐ (AI camera features) வசதிகள் இதில் வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கனும் என்று சொல்ல வைக்கும் அளவிற்கு உள்ளன.
Massive Battery and Cooling System
பிரம்மாண்டமான பேட்டரி மற்றும் கூலிங் வசதி: (Massive 7000mAh battery) பேட்டரியைப் பொறுத்தவரை இது பலருக்கும் ஒரு மாஸான சர்ப்ரைஸ் ஆகும். நாள் முழுவதும் தடங்கலின்றி இயங்க ஒரு ராட்சத 7000எம்ஏஎச் பேட்டரி (7000mAh battery) இதனுள் கொடுக்கப்பட்டுள்ளது. இதை அதிவேகமாக சார்ஜ் செய்ய 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (45W SUPERVOOC fast charging) மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse charging) வசதியும் உள்ளது.
தொடர்ந்து பல மணி நேரம் கேம் விளையாடும் போது மொபைல் சூடாவதைத் தடுக்க, இதில் 3900மிமீ² அளவிலான சூப்பர்கூல் விசி கூலிங் (VC cooling system) தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
OTT பிரியர்களுக்கு ட்ரீட்: 👉 அமேசான், ஹாட்ஸ்டார் எல்லாம் இனி ஃப்ரீ! வெச்சி செய்யும் ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டங்கள்!
OPPO K14 5G Price and Offers
இந்தியாவில் விலை மற்றும் சலுகைகள்: (Price and offers in India) சாம்சங் எம்17 (Samsung M17) மற்றும் விவோ டி5எக்ஸ் (Vivo T5x) போன்களுக்கு கடும் போட்டியாக அமைந்துள்ள இந்த ஒப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி மாடல் வெறும் ரூ.19,999 என்ற ஆரம்ப விலையில் (Starting price Rs. 19,999) அறிமுகமாகியுள்ளது.
இதன் டாப் வேரியண்டான 8ஜிபி + 256ஜிபி மாடல் ரூ.23,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இதை ஒப்போ இந்தியா இ-ஸ்டோர் (OPPO India e-store) மற்றும் பிளிப்கார்ட் வழியாக வங்கித் தள்ளுபடியுடன் எளிதாக வாங்கிக்கொள்ளலாம்.
Source: tamil.gizbot


