வெறும் ₹299 விலையில் BSNL-ன் அதிரடி ஆபர்தான்! : இந்தியத் தொலைத்தொடர்பு சந்தையில் தனியார் நிறுவனங்களின் கட்டண உயர்விற்குப் பிறகு, அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) பல்வேறு அதிரடி சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. மொபைல் ரீசார்ஜ் திட்டங்கள் மட்டுமின்றி, தங்களுடைய அதிவேக பிராட்பேண்ட் சேவையிலும் (High-speed broadband service) வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் மலிவு விலை திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது பாரத் ஃபைபர் பிரிவில் மிகவும் மலிவான விலையில் ஒரு சூப்பர் பிளானை வழங்குகிறது.
வெறும் ₹299 விலையில் BSNL-ன் அதிரடி ஆபர்தான்!
குறைந்த செலவில் தடையற்ற அதிவேக இணைய சேவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை எதிர்பார்க்கும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களுக்கு இந்த புதிய திட்டம் ஒரு மிகச்சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தனியார் நிறுவனங்கள் பிராட்பேண்ட் இணைப்பிற்கு அதிக கட்டணம் வசூலிக்கும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த முயற்சி சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த பட்ஜெட் விலையிலான ஃபைபர் திட்டத்தின் முழு நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
வெறும் ₹299 விலையில் அதிவேக இணையம் மற்றும் டேட்டா சலுகை
பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் (BSNL Bharat Fiber) வழங்கும் இந்த ஆரம்ப கால பிராட்பேண்ட் திட்டத்தின் விலை வெறும் 299 ரூபாய் மட்டுமே ஆகும். இந்த திட்டத்தை நீங்கள் தேர்வு செய்யும் போது உங்களுக்கு 25 Mbps என்ற அதிவேக இணைய வேகம் (Internet speed) தங்கு தடையின்றி கிடைக்கிறது. இதன் மூலம் வீட்டின் அன்றாடத் தேவைகளான ஆன்லைன் வகுப்புகள், அலுவலக வேலைகள் மற்றும் சமூக வலைத்தளப் பயன்பாடுகளை மிக எளிதாக மேற்கொள்ள முடியும்.
மேலும், இந்த திட்டத்தில் பயனர்களுக்கு ஒட்டுமொத்தமாக 3300 GB வரை அதிவேக டேட்டா (High speed data) வழங்கப்படுகிறது. இந்த குறிப்பிட்ட டேட்டா வரம்பு முடிந்த பிறகும் கூட, இணைய சேவை முற்றிலும் துண்டிக்கப்பட மாட்டாது. அதற்குப் பதிலாக இணையத்தின் வேகம் 4 Mbps ஆகக் குறைக்கப்பட்டு அன்லிமிடெட் டேட்டா சேவை தொடர்ந்து வழங்கப்படும். இதனால் டேட்டா தீர்ந்துவிடுமோ என்ற கவலை இல்லாமல் மாத முழுவதும் இணையத்தைப் பயன்படுத்தலாம்.
இதையும் படியுங்கள்: இனி இஷ்டத்துக்கு பணம் எடுக்க முடியாது! RBI கொண்டுவந்த அதிரடி ஆட்டோ டெபிட் ரூல்ஸ்!
500-க்கும் மேற்பட்ட இலவச லைவ் டிவி சேனல்கள்
இந்த திட்டத்தின் மற்றொரு மிகப்பெரிய சிறப்பம்சமே இதனுடன் கிடைக்கும் இலவச பொழுதுபோக்குச் சலுகைதான். இந்த ரூ.299 பிளானில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பிரத்யேக இன்டர்நெட் புரோட்டோகால் டிவி (Internet Protocol Television - IPTV) சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எக்ஸ்ட்ரா கட்டணம் ஏதுமின்றி 500-க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்களை (Live TV channels) எச்டி தரத்தில் பார்த்து மகிழ முடியும்.
இதையும் படியுங்கள்: Google Gmail 5GB Storage: கூகுள் அதிரடி! இனி 5ஜிபி தான் இலவசமா?
சாதாரண கேபிள் டிவி அல்லது டிடிஹெச் இணைப்பிற்கு மாதந்தோறும் தனியாகப் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய லாபகரமான சலுகையாகும். ஒரே ரீசார்ஜில் அதிவேக இன்டர்நெட் மற்றும் டிவி சேனல்கள் என இரண்டும் கிடைப்பதால் வாடிக்கையாளர்களின் மாதாந்திர பொழுதுபோக்குச் செலவு பாதியாகக் குறைகிறது. வெச்சி செஞ்சிட்டாங்க என்று சொல்லும் அளவிற்கு பிஎஸ்என்எல் இந்த ஆபரை செதுக்கியுள்ளது.
வாங்குனா இப்படி ஒரு போன் மற்றும் லேண்ட்லைன் கனெக்ஷன் வாங்கணும்!
இணையம் மற்றும் டிவி சேனல்கள் மட்டுமின்றி, இந்த திட்டத்துடன் இலவச லேண்ட்லைன் இணைப்பும் (Free landline connection) வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த லேண்ட்லைன் மூலம் இந்தியாவின் எந்தவொரு நெட்வொர்க்கிற்கும் 24 மணி நேரமும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளிவட்டார அழைப்புகளை (Unlimited local and STD calls) முற்றிலும் இலவசமாகப் பேசிக் கொள்ள முடியும். இதற்காகத் தனியாகக் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.
இருப்பினும், இந்த ரூ.299 திட்டமானது புதிய வாடிக்கையாளர்களுக்கான ஒரு அறிமுகச் சலுகை (Promotional offer) என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த திட்டத்தை நீங்கள் பெற்று முதல் 6 மாதங்கள் மட்டுமே இந்த சலுகை விலையில் பயன்படுத்த முடியும். அதன் பிறகு, இந்த திட்டம் தானாகவே 399 ரூபாய் மதிப்பிலான ஃபைபர் ரூரல் ஹோம் திட்டத்திற்கு மாற்றப்படும். அட்டகாசமான இந்த ஆபரை உடனே வாங்கிப் பயன்பெறுங்கள்.