Redmi Note 17 Pro Max: 10,000mAh பேட்டரி.. வரும் புதிய போன்!

Redmi Note 17 Pro Max Specs Tamil: 10000mAh பேட்டரி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 200MP கேமராவுடன் வரும் புதிய ரெட்மி 5ஜி போன் முழு விபரம்.

Xiaomi Redmi Note 17 Pro Max official launch with 10000mAh battery 200MP Samsung HP5 camera 120Hz refresh rate display and expected price details explained in Tamil

Redmi Note 17 Pro Max:
ரெட்மி (Redmi) நிறுவனம் விரைவில் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் (Redmi Note 17 Pro Max) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். இந்நிலையில் இந்த புதிய ரெட்மி போனின் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

நோட் சீரிஸ் வரிசையில் அடுத்த அதிரடி மாடலாக வரப்போகும் இந்த புதிய மாஸ் மொபைல், ஒட்டுமொத்த பட்ஜெட் 5ஜி சந்தையையும் அசைத்துப் பார்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நுகர்வோர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய மாடலில் லீக் ஆன முழு விபரங்களைத் தொடர்ந்து கீழே விரிவாகப் பார்க்கலாம்.

Redmi Note 17 Pro Max Specifications

ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள்: சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7500 (MediaTek Dimensity 7500) சிப்செட் உடன் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் அசாத்திய செயல்திறனை வழங்கும். அதுவும் இந்த போனில் ஹெவி கேமிங் ஆப்களை தடையின்றி ஸ்மூத்தாகப் பயன்படுத்தலாம்.

இதன் வேகம் மல்டி-டாஸ்கிங் செய்வதற்கு மிகவும் அருமையாக இருக்கும். ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு அடுத்தடுத்த ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் தொடர்ந்து கிடைக்கும். அதுவும் இதில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் உள்ளது.

Redmi Note 17 Pro Max Processor

ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் பிராசஸர் விபரங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த செயல்பாடும் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 12ஜிபி ரேம் (12GB RAM) மற்றும் 256ஜிபி இன்டெர்னல் மெமரி (256GB Internal Memory) உடன் இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.

மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் (MicroSD Card Slot) ஆதரவு இந்த புதிய ரெட்மி போனில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவும் படியுங்கள்:  Jio, Airtel கட்டண உயர்வு: தப்பிக்க எளிய வழி!

Redmi Note 17 Pro Max Camera

ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் கேமரா: 200எம்பி சாம்சங் ஹெச்பி5 பிரைமரி கேமரா (200MP Samsung HP5 Primary Camera) + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா (8MP Ultra Wide Camera) என்கிற ட்ரிப்ளி ரியர் கேமரா உடன் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த கேமராவின் மூலம் மிகத் துல்லியமான 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.

அதேபோல செல்பிகளுக்கும், தெளிவான வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 32எம்பி கேமரா (32MP Selfie Camera) கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு நவீன கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. போட்டோகிராபி பிரியர்கள் வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கனும் என்று சொல்லும் அளவிற்கு கேமரா செட்டப்பில் வெச்சி செஞ்சிட்டாங்க.

இதுவும் படியுங்கள்: New Aadhaar App Update: பழைய mAadhaar அக்கவுண்ட் விபரங்கள் புதிய அப்பிற்கு மாறுமா? குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த UIDAI!

Xiaomi Redmi Note 17 Pro Max official launch with 10000mAh battery 200MP Samsung HP5 camera 120Hz refresh rate display and expected price details explained in Tamil

Redmi Note 17 Pro Max Display

ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் டிஸ்ப்ளே விபரங்கள்: 7-இன்ச் டிஸ்ப்ளே (7-inch display) உடன் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்ப்ளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய திரை என்பதால் வீடியோக்கள் மற்றும் கேம்கள் பார்க்கப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

Redmi Note 17 Pro Max Battery

ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் பேட்டரி விபரங்கள்: 10000mAh பேட்டரி (10000mAh Battery) உடன் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் சாதாரண பயன்பாட்டிற்குத் தொடர்ந்து மூன்று நாட்களுக்குத் தேவையான பேட்டரி பேக்கப்பை தாராளமாக வழங்கும்.

மேலும் இந்த பிரம்மாண்ட பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் (100W Fast Charging) வசதியும் இதில் உள்ளது. ஆகவே மிகக் குறைந்த நேரத்தில் போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும். கனெக்டிவிட்டியைப் பொறுத்தவரை 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன.

Redmi Note 17 Pro Max Price

ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் விலை விபரங்கள்: அனைத்து பிரம்மாண்ட அம்சங்களுடன் வரப்போகும் இந்த ரெட்மி 5ஜி போன் சற்று உயர்வான மிட்-ரேன்ஜ் விலையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போதைய சந்தை நிலவரப்படி, இந்த போனின் ஆரம்ப விலை தோராயமாக 30,000 ரூபாய் பட்ஜெட்டில் (Expected Price Around Rs.30,000) இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக டெக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக