சமூக வலைத்தளங்களின் முடிசூடா மன்னனாக விளங்கும் மார்க் ஜூக்கர்பெர்க்கின் (Mark Zuckerberg) 'மெட்டா' (Meta) நிறுவனத்திற்கு தற்போது ஒரு மிகப்பெரிய சோதனை வந்துள்ளது.
Facebook, instagram விட்டு ஓடும் 2 கோடி மக்கள்! என்ன ஆச்சு?
What's Behind The Sudden Drop?
திடீர் வீழ்ச்சிக்கு என்ன காரணம்? (Reason behind the sudden drop): இந்த 2 கோடி பயனர்களின் இழப்பிற்கு மெட்டா நிறுவனத்தின் உள்நாட்டுப் பிரச்சனைகள் காரணம் இல்லை. சர்வதேச அளவிலான புவிசார் அரசியல் பிரச்சனைகளே (Geopolitical disruptions) இதற்கு முக்கியக் காரணம் என மெட்டா தெரிவித்துள்ளது. குறிப்பாக ஈரானில் ஏற்பட்டுள்ள இணையதள முடக்கம் (Internet instability in Iran) காரணமாக அங்குள்ள மக்களால் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகளைப் பயன்படுத்த முடியவில்லை. அடுத்தபடியாக, ரஷ்யாவில் வாட்ஸ்அப் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் (Restrictions on WhatsApp in Russia) காரணமாக அங்கு பல மில்லியன் மக்கள் அதைப் பயன்படுத்த முடியாமல் முடக்கப்பட்டுள்ளனர். எனவே மக்கள் தாமாக வெளியேறவில்லை, அந்தந்த நாடுகளில் லாக்-இன் செய்ய முடியாததே இந்த மெகா சரிவுக்கு முக்கியக் காரணம்.
மேலும் படிக்க: போனில் சத்தமாக வரும் Emergency Alert மெசேஜ்! ஏன் தெரியுமா?
Billions Still Flowing Into AI
ஏஐ தொழில்நுட்பத்தில் கொட்டும் முதலீடு (Billions flowing into AI): பயனர்கள் குறைந்தாலும் மெட்டா நிறுவனம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயற்கை நுண்ணறிவில் (Artificial Intelligence) தனது முழு கவனத்தையும் தீவிரமாகச் செலுத்தி வருகிறது. சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க், இந்த 2026 ஆம் ஆண்டில் மட்டும் ஏஐ தொழில்நுட்பத்திற்காக சுமார் 135 பில்லியன் முதல் 145 பில்லியன் டாலர்கள் வரை (Spend between $135 billion and $145 billion) செலவிடத் திட்டமிட்டுள்ளார். முந்தைய திட்டத்தை விட இது 10 பில்லியன் டாலர்கள் அதிகமாகும். இந்த பிரம்மாண்டமான முதலீடு முழுவதும் ஏஐ-க்கான அட்வான்ஸ்டு சிப்கள் (Advanced chips) மற்றும் மாபெரும் டேட்டா சென்டர்களை (Massive data centres) உருவாக்குவதற்காகப் பயன்படுத்தப்பட உள்ளது.
Legal Troubles Add More Pressure
மெட்டாவிற்கு குடைச்சல் கொடுக்கும் சட்ட சிக்கல்கள் (Legal troubles add pressure): ஒருபக்கம் யூசர்கள் சரிவு என்றால், மறுபக்கம் மெட்டாவிற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குகளும் (Ongoing lawsuits) மிகப்பெரிய தலைவலியை உருவாக்கியுள்ளன. இளைஞர்களின் பாதுகாப்பிற்கு (Youth safety) எதிராக இந்த தளங்கள் செயல்படுவதாகக் கூறி தொடரப்பட்ட பல வழக்குகளில் மெட்டாவிற்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் நுகர்வோர் பாதுகாப்பு வழக்குகளில் மெட்டாவிற்கு எதிராகத் தீர்ப்பு வந்த நிலையில், இதனால் நிறுவனத்திற்கு எதிர்காலத்தில் பொருளாதார ரீதியாகப் பெரும் இழப்பு (Material loss) ஏற்படலாம் என்றும் முதலீட்டாளர்களுக்கு மெட்டா அதிகாரப்பூர்வமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
Job Cuts To Balance The Equation
செலவைக் குறைக்க வேலையிழப்பு (Job cuts to balance the equation): ஒருபுறம் ஏஐ தொழில்நுட்பத்தில் பல பில்லியன் டாலர்களைக் கொட்டி வரும் மெட்டா, மறுபுறம் நிறுவனத்தின் செலவுகளைக் கட்டுக்குள் வைப்பதற்காகக் கடுமையான ஆட்குறைப்பு (Layoffs) நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. 2026 ஆம் ஆண்டு முழுவதும் சுமார் 10,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளது. அதிலும் மே 20 முதல் இந்த பணிநீக்கம் தீவிரமாக நடைபெறவுள்ளது. மேலும், காலியாக உள்ள சுமார் 5,000 பணியிடங்களில் புதிதாக ஆட்களை எடுப்பதையும் மெட்டா நிறுத்தியுள்ளது. ஏஐ பக்கம் முழு கவனமும் திரும்புவதால் ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டு நிறுவனம் சுருங்கி வருகிறது.