200MP கேமராவுடன் மிரட்டும் Vivo X300 Ultra & FE போன்கள்

மே 6-ல் இந்தியாவில் களமிறங்கும் முரட்டுத்தனமான Vivo X300 Ultra மற்றும் Vivo X300 FE ஸ்மார்ட்போன்களின் விலை, 200MP ZEISS கேமரா, 6600mAh பேட்டரி குறித்த

200MP கேமராவுடன் மிரட்டும் புதிய Vivo X300 Ultra & FE போன்கள்!, vivo x300 ultra and vivo x300 fe smartphone launch date in india may 6 snapdragon 8 elite gen 5 200mp zeiss camera tech news tamil

ஸ்மார்ட்போன் சந்தையில் பிரீமியம் செக்மென்ட்டில் (Premium segment) ஆப்பிள், சாம்சங் போன்ற ஜாம்பவான்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில், விவோ (Vivo) நிறுவனம் தனது புதிய எக்ஸ்300 சீரிஸை (Vivo X300 series) இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. விவோவின் 'X' சீரிஸ் போன்கள் என்றாலே அதன் கேமரா குவாலிட்டி எப்போதுமே வேற லெவலில் இருக்கும். அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், 'Vivo X300 Ultra' மற்றும் 'Vivo X300 FE' ஆகிய இரண்டு மிரட்டலான ஸ்மார்ட்போன்கள் வரும் மே 6-ஆம் தேதி (launch in India on May 6) அதிகாரப்பூர்வமாக களமிறங்க உள்ளன. மே 14 முதல் இதன் விற்பனை துவங்கவுள்ள நிலையில், இந்த புதிய X300 சீரிஸில் அப்படி என்னென்ன பிரம்மாண்டமான அம்சங்கள் வரவுள்ளன என்பதை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

Vivo X300 FE Specs And Features

Vivo X300 FE சிறப்பம்சங்கள்: விவோ நிறுவனத்தின் இந்த மாடலில் மிகவும் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Gen 5 chipset) பொருத்தப்பட்டுள்ளது. வீடியோ பார்ப்பதற்கும், கேமிங் விளையாடுவதற்கும் ஏற்ற வகையில் இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.31-இன்ச் 1.5K LTPO AMOLED டிஸ்பிளே (AMOLED display) கொடுக்கப்பட்டுள்ளது.

பேட்டரி மற்றும் கேமரா: நாள் முழுவதும் தடையின்றி பயன்படுத்த ஒரு பிரம்மாண்டமான 6,500mAh பேட்டரி (6,500mAh battery) இதில் உள்ளது. இதை சார்ஜ் செய்ய 90W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. கேமராவைப் பொறுத்தவரை பின்புறம் 50-மெகாபிக்சல் முதன்மை சென்சார், 50-மெகாபிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைடு என டிரிபிள் கேமரா அமைப்பு (triple setup) இடம்பெற்றுள்ளது. இவை அனைத்தும் தலைசிறந்த ZEISS ஆப்டிக்ஸ் (ZEISS optics) தொழில்நுட்பத்துடன் ட்யூன் செய்யப்பட்டுள்ளன.

நிறங்கள்: இந்த போன் லிலாக் பர்பிள் (Lilac Purple), நோயர் பிளாக் (Noir Black) மற்றும் இந்தியாவிற்கே பிரத்யேகமான 'அர்பன் ஆலிவ்' (India-exclusive Urban Olive) என்ற புதிய பச்சை நிறத்திலும் வெளியாகவுள்ளது.

மேலும் படிக்க: Facebook, instagram விட்டு ஓடும் 2 கோடி மக்கள்! என்ன ஆச்சு?

vivo x300 ultra and vivo x300 fe smartphone launch date in india may 6 snapdragon 8 elite gen 5 200mp zeiss camera tech news tamil

Vivo X300 Ultra Specifications And Features

Vivo X300 Ultra மிரட்டலான அம்சங்கள்: பெயருக்கு ஏற்றார் போலவே இதன் ஸ்பெசிபிகேஷன்களும் மிக முரட்டுத்தனமாக உள்ளன. இதில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் உச்சக்கட்ட பிரைட்னஸாக 3000 நிட்ஸ் (peak brightness of up to 3,000 nits) கொண்ட 6.82-இன்ச் 2K LTPO AMOLED பெரிய டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இதன் இதயமாக அதிநவீன ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Elite Gen 5 chipset) பொருத்தப்பட்டுள்ளது. 16GB RAM மற்றும் 1TB ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுடன் இது வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vivo X300 Ultra Camera

பேட்டரி மற்றும் 200MP கேமரா: இந்த Ultra மாடலில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் (100W fast charging support) வசதியுடன் கூடிய 6600 mAh பெரிய பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் கேமரா செட்டப் தான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பின்புறம் 200-மெகாபிக்சல் முதன்மை சென்சார் (200-megapixel primary sensor), நீண்ட தூரத்தை ஜூம் செய்து துல்லியமாகப் படம்பிடிக்க 200-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைடு கேமரா ஆகியவை ZEISS ஆக்ஸ் தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கூடுதல் ஜூமிங் திறனுக்காக பிரத்யேகமான ZEISS டெலிகான்வெர்ட்டர் லென்ஸ்களும் (Zeiss teleconverter lenses) இதில் சப்போர்ட் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக