POCO X6 5G: ₹699-க்கு போன் கிடைக்குதா? Flipkart மோசடி! : வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கணும்!" என்று சொல்லும் அளவிற்கு போக்கோ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற போன் POCO X6 5G. வழக்கமாக ₹20,000-க்கு மேல் விற்கப்படும் இந்த போன், இப்போது பிளிப்கார்ட் தளத்தில் வெறும் ₹699-க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
வெச்சி செஞ்சிட்டாங்க என்று சொல்லும் அளவிற்கு, இதைப்பார்த்த உடனே பலரும் ஆர்டர் செய்ய துடிக்கிறார்கள். ஆனால், இந்த ஆஃபருக்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய தந்திரம் ஒளிந்துள்ளது. வீடியோ ஆதாரத்துடன் இது என்ன என்பதை இப்போது விரிவாகப் பார்ப்போம்.
இதுவும் படியுங்கள்: Post Office சேமிக்கிறீங்களா? இனி PAN Card இல்லன்னா சிக்கல் தான்! New Rules 2026 இதோ!
POCO X6 5G Display and Features
போக்கோ எக்ஸ்6 5ஜி டிஸ்ப்ளே மற்றும் சிறப்பம்சங்கள்: இந்த போன் 6.67-இன்ச் 1.5K AMOLED திரை, Snapdragon 7s Gen 2 பிராசஸர் மற்றும் 64MP OIS கேமரா என ஒரு முரட்டுத்தனமான 5ஜி போன் ஆகும். இந்த விலைக்கு இப்படி ஒரு போன் கிடைப்பது சாத்தியமே இல்லை என்பது தெரிந்தாலும், அந்த ₹699 என்ற விலை வாசகர்களைக் கிளிக் செய்யத் தூண்டுகிறது.
இதையும் படியுங்கள்: 👉 ₹21,000-க்கு 6000mAh பேட்டரி! iQOO-வின் முரட்டு சம்பவம்!
பிளிப்கார்ட் வீடியோவில் வெளிப்பட்ட பகீர் உண்மை!
சக்தி பகிர்ந்த ஸ்கிரீன் ரெக்கார்டரை (Screen Recording) உன்னிப்பாகக் கவனிக்கும்போது ஒரு மிகப்பெரிய மோசடி அல்லது விற்பனையாளர் தந்திரம் (Seller Tactic) அம்பலமாகியுள்ளது.
தவறான லிஸ்டிங்: பிளிப்கார்ட் தேடல் முடிவில் (Search Results) போக்கோ எக்ஸ்6 5ஜி மொபைல் படத்தைக் காட்டி, அதன் கீழே விலை ₹699 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பை நவ் (Buy Now) கிளிக் செய்தால் என்ன நடக்கிறது?: வாசகர்கள் ஆவலோடு அந்தப் போனை கிளிக் செய்து 'Buy Now' கொடுக்கும்போது, அது மொபைல் போனுக்குப் பதிலாக 'Okzni High Power Green Laser Pointer' என்ற லேசர் லைட் பக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது.
மாற்றப்பட்ட பொருட்கள்: மொபைல் தேடலில் லேசர் லைட்டை போக்கோ போன் போல லிஸ்ட் செய்து, மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வாங்க வைக்கிறார்கள்.
வாசகர்களுக்கான எச்சரிக்கை!
இது போன்ற ஆஃபர்களைப் பார்த்தவுடன் அவசரப்பட்டு பணத்தைச் செலுத்திவிடாதீர்கள். நீங்கள் வாங்குவது மொபைல் போன் தானா? அல்லது வேறு ஏதேனும் ஆக்ஸஸரீஸ் (Accessories) பொருட்களா? என்பதை செக்-அவுட் (Checkout) பக்கத்தில் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்கவும்.
விற்பனையாளர் பெயர், பொருளின் பெயர் மற்றும் அதன் விபரங்களை (Product Details) முழுமையாகப் படித்த பின்பே ஆர்டர் செய்யவும். இல்லையெனில், மொபைல் வரும் என்று காத்திருந்தால் கையில் லேசர் லைட் தான் கிடைக்கும்.

