Jio யூசர்களுக்கு ஜாட்பாட்.! ஸ்விக்கி ஃப்ரீ, ரூ.50 கேஷ்பேக்.! மாஸ் பிளான்!

Jio 1028 Plan Details Tamil: ஜியோ ரூ.1028 ரீசார்ஜ் திட்டத்தில் கிடைக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஸ்விக்கி ஒன், Jio யூசர்களுக்கு ஜாட்பாட்.!

Jio யூசர்களுக்கு ஜாட்பாட்.! ஸ்விக்கி ஃப்ரீ, ரூ.50 கேஷ்பேக்.! மாஸ் பிளான்!, Jio 1028 Plan Details Free Swiggy and Gemini Pro Offer Tamil

Jio யூசர்களுக்கு ஜாட்பாட்.! ஸ்விக்கி ஃப்ரீ, ரூ.50 கேஷ்பேக்.! மாஸ் பிளான்!
: இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), தனது ப்ரீபெய்ட் சிம் கார்டு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிரடியான ரீசார்ஜ் திட்டத்தை வழங்கி வருகிறது.

இந்த ஒரு குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டத்தில் உங்களுக்கு ரூ.50 கேஷ்பேக் (Cashback) கிடைப்பதுடன், ஆன்லைன் ஃபுட் டெலிவரி முதல் மளிகை பொருட்கள் டெலிவரி வரை எல்லாமே முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

வழக்கமாக மொபைல் ரீசார்ஜில் கிடைக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், அதிவேக டேட்டா, எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளும் இதில் எந்தவொரு குறைவும் இல்லாமல் கச்சிதமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

Jio Rs 1028 Prepaid Plan Complete Details

ஜியோ ரூ.1028 திட்ட விவரங்கள்: ஜியோவின் இந்த ரூ.1028 பிளான் ஆனது தற்சமயம் 1000 ரூபாய் பட்ஜெட் செக்மெண்ட்டில் ஏகப்பட்ட சலுகைகளுடன் கிடைக்கும் ஒரு மிகச்சிறந்த ரீசார்ஜ் திட்டமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக 84 நாட்கள் வேலிடிட்டி (Validity) வழங்கப்படுகிறது.

Jio யூசர்களுக்கு ஜாட்பாட்.! ஸ்விக்கி ஃப்ரீ, ரூ.50 கேஷ்பேக்.! மாஸ் பிளான்!

இதில் நாளொன்றுக்கு 2 ஜிபி அதிவேக 4ஜி டேட்டா (Daily 2GB Data) வீதம், ஒட்டுமொத்த வேலிடிட்டி நாட்களுக்கும் சேர்த்து மொத்தம் 168 ஜிபி டேட்டாவை 4ஜி வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தினசரி டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும்.

மிக முக்கியமாக, நீங்கள் ஒருவேளை 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஜியோ கஸ்டமராக இருந்தால், இந்த 84 நாட்களும் எவ்வித கட்டுப்பாடும் இல்லாத அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) முற்றிலும் இலவசமாகப் பயன்படுத்த முடியும்.

இதனுடன் இந்தியா முழுவதும் எந்த நெட்வொர்க்குக்கும் பேசிக்கொள்ளும் அன்லிமிடெட் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் வசதியும், நாளொன்றுக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவும் படியுங்கள்: SBI வாடிக்கையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை.! புதிய UPI மோசடி!

Jio 1028 Plan Details Free Swiggy and Gemini Pro Offer Tamil

Unbelievable OTT and Premium AI Subscriptions

மிரட்டலான ஓடிடி மற்றும் ஏஐ கிளவுட் சலுகைகள்: இந்த வழக்கமான சலுகைகளுக்குப் பிறகு தான் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ஏகப்பட்ட கூடுதல் பிரீமியம் சலுகைகளை அள்ளிக் கொடுத்துள்ளது.

முதலாவதாக, ஜியோவின் இந்த ஸ்பெஷல் ஆஃபரின் கீழ் 3 மாதங்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) ஓடிடி சந்தா முற்றிலும் இலவசமாகக் கிடைக்கிறது.

அடுத்ததாக, ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) ஆஃபரின் கீழ் 50 ஜிபி வரையிலான கிளவுட் ஸ்டோரேஜ் வசதியும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் உச்சமாக, கூகுள் நிறுவனத்தின் மிகவும் அட்வான்ஸ்டு ஏஐ சேவையான ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக 18 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த ஜெமினி ப்ரோ சந்தாவை நாம் தனியாகப் பெற வேண்டும் என்றால் சந்தையில் ரூ.35,100 வரை செலவாகும். ஆனால் ஜியோ யூசர்களுக்கு இது முற்றிலும் ஃப்ரீயாகக் கிடைக்கிறது.

இதன் மூலம் 5000 ஜிபி வரையிலான பிரம்மாண்ட கிளவுட் ஸ்டோரேஜ் (Cloud Storage) மற்றும் நானோ பனானா (Nano Banana) போன்ற பிரத்யேக ஏஐ அணுகல்களையும் வாடிக்கையாளர்கள் இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதுவும் படியுங்கள்: Instagram மாஸ் அப்டேட்.! வந்தாச்சு Grid Reorder ஃபீச்சர்!

Jio 1028 Plan Details Free Swiggy and Gemini Pro Offer Tamil
Jio யூசர்களுக்கு ஜாட்பாட்.!

Free Swiggy One Membership Benefits

இலவச ஸ்விக்கி ஒன் மெம்பர்ஷிப் நன்மைகள்: முன்னணி ஓடிடி மற்றும் ஏஐ சலுகைகள் போக, ஆன்லைனில் சாப்பாடு மற்றும் மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்பவர்களுக்காக இந்த திட்டத்தில் ஸ்விக்கி ஒன் மெம்பர்ஷிப் (Swiggy One Membership) இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த மெம்பர்ஷிப் மூலமாக, உங்களது வீட்டின் அருகில் இருக்கும் 7 கிலோ மீட்டர்களுக்குள் உள்ள உணவகங்களில் ரூ.99-க்கு மேல் ஆர்டர் செய்தால் எவ்வித டெலிவரி கட்டணமும் (No Delivery Charge) வசூலிக்கப்படாது.

அதுமட்டுமில்லாமல், நீங்கள் ஆர்டர் செய்யும் உணவுகளுக்கு 30 சதவீதம் வரை கூடுதல் டிஸ்கவுண்ட் ஆஃபர்களையும் இந்த மெம்பர்ஷிப் வழியாகப் பெற்றுக்கொள்ளலாம். மழைக் காலம் அல்லது அதிக டிமாண்ட் உள்ள நேரங்களில் வசூலிக்கப்படும் சர்ஜ் கட்டணமும் (Surge Fee) உங்களுக்குக் கிடையாது.

அதேபோல், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் (Swiggy Instamart) வழியாக மளிகைப் பொருட்களை ரூ.199-க்கு மேல் ஆர்டர் செய்தால் உங்களுடைய வீட்டிற்கே கட்டணமில்லா ஃப்ரீ டெலிவரி கிடைக்கும். அங்கு ரூ.399-க்கு மேல் ஆர்டர் செய்தால் கூடுதல் சர்ஜ் கட்டணமும் கிடையாது.

மேலும், டைன்அவுட் (Dineout) ஆப் வழியாக ரெஸ்டாரண்ட்களில் டேபிள் புக்கிங் செய்யும் கஸ்டமர்களுக்கு டாப் உணவகங்களில் 50 சதவீதம் வரை தள்ளுபடி ஆஃபர்களும் கிடைக்கும். இவை அனைத்திற்கும் மேலாக இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ரூ.50 கேஷ்பேக் சலுகையும் உண்டு.

கருத்துரையிடுக